பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

சலிலிருந்துதான் வீழ்படிவு, தூள் வடிவில் கிடைக்கிறது

hemisphere : அரைக்கோளம் : அரையுருண்டை வடிவம்.

hemlock : தேவதாரு : தேவதாரு மரக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் வெட்டுமரம் தோற்றத்தில் ஊசியிலை மரம் போன்றிருக்கும். சட்டங்கள் செய்வதற்கு மிகுதியாகப் பயன்படுகிறது

hempseed oil : சணல் விதை எண்ணெய்: சணல் செடியிலிருந்து பெறப்படும் எண்ணெய். இந்த எண்ணெய் இறக்கியவுடன் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். பின்னர், பழுப்பு மஞ்சள் வண்ணத்திற்குமாறிவிடும். வண்ணச்சாயங்கள்,சோப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது

henry : (மின்.) ஹென்றி : தூண்டத்தின் மின்னியல் அலகு. ஒரு மின்சுற்றுவழியில், மின்னோட்ட்ம் வினாடிக்கு ஓர் ஆம்பியர் என்ற வீதத்தில் மாறும்போது, அந்த மின் சுற்றுவழியில் ஒரு ஒல்ட் மின்னியக்கவிசை உண்டாகிறது. அப்போது அந்த மின்சுற்று வழியில் ஒரு ஹென்றிதுாண்டம் இருக்கிறது

henry, joseph (மின்.) ஜோசஃப் (1797-1878) : காந்தத்தூண்டல் தத்துவத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி.எனினும், இத்தத்துவத்தைப் பின்னர் ஃபாரடே கண்டுபிடித்த பிறகே இவரது பணி வெளியிடப்பட்டு புகழ்பெற்றது. பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அமெரிக்க வானியல் கழகத்தை நிறுவியவர்

hepplewhite : ஹெப்பிள்ஒயிட் :லண்டனைச் சேர்ந்த ஹெப்பிள்ஒயிட் என்பவர் தயாரித்த அறைகலன்களின் பானியில் அமைந்த அறைகலன்கள். கேடய இதய வடிவ நீள்வட்டம் போன்ற வடிவங்களில் இந்த அறைகலன்கள் அமைந்திருக்கும்

heptagon : எழுகோணக் கட்டம் : ஏழுபக்கங்களும், ஏழு கோணங்களும் உடைய ஒர் உருவடிவம்

heptode : ஏழுமுனையம் : ஏழுமுனையங்களைக் கொண்ட ஒர் எலெக்ட்ரான். இதில் ஒர் எதிர்முனைத் தகடும், ஐந்து இணைப்பு வரைச்சட்டங்களும் இருக்கும்

hermer phrodite caliper: முரண் இடுக்கியளவி: இதில் ஒரு கால், கவராயத்தில்உள்ளது போன்று கூர்மையாக இருக்கும்; மற்றொரு கால், சாதாரண வெளிப்புற இடுக்கியளவில்_உள்ளது போன்று சற்றேவளைந்திருக்கும்

hernia: (உடலி) குடலிறக்கம்: குடலின் ஒரு பகுதி, உடலின் முன்புறமுள்ள் தசைச்சுவரின் வலுக்குறைந்த பகுதி வழியாக வெளித்தள்ளப்படுதல்

herringbone bond : மீன் எலும்புப் பிணைப்பு : தையலிலும், கல் செங்கல் ஒடு பாவுதலிலும்’ தச்சுக் குறுக்குக் கை இணைப்புகளிலும் மீன்வகையின் எலும்பு போல எதிரெதிர்ச் சாய்வான வரிசைப்பட அமைந்த பிணைப்பு

herringbone gear : மீன் எலும்புப் பல்லிணை : பல்லிணை முகப்பின் மையக்கோட்டிலிருந்து இருபுறமும் சாய்வாக இருக்கும் பற்களைக் கொண்ட ஒரு பல்லிணை. இதில் இரு அகச்சுருள் பல்லிணைகளில் இருப்பதுபோன்று, ஒன்று இடப்புறமும், ஒன்று வலப்புறமாகப் பற்கள் பொருத்தப்பட்டிருக்கும். சுரங்கங்களில் பயன்படும் கனரக