பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

high volume printing: (கணிப்.) அதிகப் பக்கங்கள் அச்சடிப்பு

high-wing monoplane: (வானூ.) உயர்நிலைச் சிறகு ஒற்றைத் தட்டு விமானம்:கட்டுமானத்தின் மேல் நேரடியாகவோ, அதற்கு மேலேயோ சிறகு பொருத்தப்பட்டுள்ள ஒற்றைத்தட்டு விமானம்

hinge: கீல்: கதவினைத் திறக்கவும் அடைக்கவும் இயல்விக்கும் வகையில் ஒரு குடுமிமீது திருகி இயங்கும் அமைப்புடைய சுழல் திருகு

கீல்(படம்)

hip : (க.க.) மோட்டு இணைப்பு வாரி: ஒன்றுக்கொன்று கோணத்தில் அமைந்துள்ள ஒரு சாய்வான கூரையின் இரு பகுதிகளுக்குமிடையில் இறவாரங்களிலிருந்து கூடல் வாய்வரையுள்ள புற இணைப்பு இந்தச் சொல் கூடல் வாயைக் குறிப்பதில்லை. இது உட்கோணமுடைய "மோட்டு உள்மடி"வுக்கு எதிர்மாறானது

hip rafters : கீழ்விளிம்பு : இற வாரக்கை :கூரையின் இணைப்பு வாரியாக அமைந்துள்ள இறவாரக்கைகள். இது கூரைக்கூடல் வாயிலிருந்து வேறுபட்டது

hip roof : இணைப்பு வரி மோடு :கீழ் விளிம்பும்,பக்கங்களும் சாய்வாக அமைந்த கூரை

hob: (எந்.) (1) சக்கரப்பல்வெட்டு:புழுப்பற் சக்கரப் பற்களையும், முள் பல்லிணைகளையும் வெட்டுவதற்கான கருவி

(2) முதன்மை வார்ப்பு: கெட்டியான எஃகினாலான முதன்மை வார்ப்பு. இது மென்மையான எஃகுப்பாளத்தில் வார்ப்படத்தின் வடிவினை பதிப்பதற்குப் பயன்படுகிறது

(3) கணப்புத் தட்பம்: அடுப்பருகிலுள்ள கணப்புத் தட்பம்

hobbing : பல்வெட்டுதல் :புழுப் பற்சக்கரங்களின் பற்களையும், வார்ப்புருப் படிம இழைகளையும் செதுக்குக் கருவிகளையும் சக்கரப் பல்வெட்டி கொண்டு வெட்டுதல்

hock leg : வளைக்கால் பாணி : முடக்கு வளைவின் கீழ்ப்பகுதியின் மீது ஒரு வளைவும் கோணமும் உடைய வளைகால் பாணி

hod : சாந்துத் தட்டு : கொத்து வேலைச் சாந்து எடுத்துச்செல்லும் தட்டு

hoffman apparatus : (வேதி.) ஹாஃப்மேன் கருவி : நீரைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி

hogging : (எந்.) பெருவெட்டுமானம் : பட்டறைகளில் எந்திரக் கருவிகளில் மிகக் கனமாக வெட்டு வேலைகள் செய்வதைக் குறிக்கும் சொல்

hoke blocks : ஹோக் அளவிகள் :பட்டறை அளவிகளைச் சரி பார்ப்பதற்குப் பயன்படும் அளவிப் பாளங்கள். இதனை மேஜர் ஹோக் என்பவ்ர் வடிவமைத்தார்

hold control : (மின்.) நிறுத்தக் கட்டுப்பாடு : தொலைக்காட்சிப் பெட்டியில் கிடைமட்ட மற்றும் செங்குத்து வீச்சு அலைவெண்களைத் தக்கவாறு அமைப்பதற்காகக் கையால் இயக்கப்படும் கட்டுப்பாட்டுச் சாதனம்

hold-down clamp : (பட்.) பிடிப்புப் பற்றிரும்பு : வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை உரிய இடத்தில் இறுகப்பிடித்து வைத்துக் கொள்வதற்கென ஒரு சமதளத்தில் பொருத்தப்பட்டுள்ள பற்றிரும்பு