பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
343

hold time : (பற்.) நிலைப்பாட்டுக் கால அளவு:பற்றவைப்பு மின்னோட்டம்' நின்ற பிறகு மின் முனைகளில் அழுத்தம் நிலைத்திருக்கும் கால அளவு

hole gauge : (உலோ.) துளை அளவி;ஒரு சிறிய துவாரத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. துவாரத்தினுள் ஒரு சிறிய விற்சுருள் கொண்ட அளவைக்கருவியைப் பொருத்தி அந்த விற்சுருள் துவாரத்தினுள் மிக அதிக அளவு விரிவடைவதற்கு அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அந்த விற்சுருளைத் துவாரத்திலிருந்து எடுத்து நுண்ணளவை மானி மூலம் அளவிடப்படுகிறது

hole injection : (மின்.) மின் துளையிடல் :மின்கடத்தாத் திண்மப் பொருளிலிருந்து, ஒரு வலுவான மின்னியல் புலத்தின் மூலம் எலெக்ட்ரான்களை அப்புறப்படுத்துவதன் மூலம் அதில் துவாரங்கள் உண்டாக்குதல்

hole saw: (உலோ.) துளை ரம்பம்:உலோகம்,மரம்,இழை போன்றவற்றில் பெரிய துளைகள் இடுவதற்குப் பயன்படும் வட்டவடிவ ரம்பம்

துளை ரம்பம் (படம்)

hollow plane : உட்புழைச் சமதளம் :மணிகள்,வார்ப்படங்கள் உருண்டையான மேற்பரப்புகளை உருவாக்குவதற்காகப் பயன்படும் உட்புழையுள்ள சமதளப்பரப்பு

hollow punch : (உலோ.) உட்புழைத் தமரூசி :உட்புழையான தலைப்புடைய கெட்டியான எஃகினாலான தமரூசி. உலோகங்கள், அட்டைகள், துணிகள் முதலியவற்றில் துளையிடுவதற்கு இது ஒரு கைச்சுத்தியுடன் பயன்படுத்தப்படுகிறது. மென்மையான பொருள்களை விட உலோகங்களில் பயன்படுத்துவதற்கான தமரூசிகள் அதிக மழுங்கலாக இருக்கும்

உட்புழைத் தமருசி (படம்)

hollow tile : உட்புழை ஓடு :புறச் சுவர்களுக்கும், தடுப்புச் சுவர்களுக்கும் மிகுதியாகப் பயன்படும் கட்டுமானப் பொருள். இது பல்வேறு வடிவங்களிலும், வடிவளவுகளிலும் தயாரிக்கப்படுகிறது. புறச் சுவருக்குப் பயன்படுத்தும்போது, இது பெரும்பாலும் சிற்ப ஒப்பனைக்குரிய குழைகாரை பூசி மூடப்படும்

holly : இலையுதிரா மரம் :முன் இலைகளையும்,பசிய சிறு மலர்களையும், செங்கனிகளையும் உடைய, மெதுவாக வளரும் ஒரு சிறிய மரம். இதன் வெட்டு மரம் வெண்மையானது; கடினமானது, நெருக்கமான கரணைகளையுடையது. பியானோவிரற்கட்டைகள், உட்பூச்சு வேலைகள் உட்புற அலங்காரங்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது

home : (விண்.) இலக்கு நோக்கிச் செலுத்துதல்:ஏவுகணையை வெப்ப அலைகள், ராடார், எதிரொலிகள், வானொலி அலைகள் போன்றவற்றை வழிச்செலுத்துவதன் மூலம் ஓர் இலக்கை நோக்கிச் செலுத்துதல்

homeopathy : (மருந்.) இனமுறை மருத்துவம் (ஓமியோபதி) : நோயினால் உண்டாகும் அதே அறிகுறிகளை உண்டாக்கும் மருந்துகளை நோயாளிகளுக்குச் சிறிதளவு கொடுத்து அதன் மூலம்