பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

நோய் நீக்கும் மருத்துவமுறை, எடுத்துக்காட்டாக, வேனற்கட்டியை உண்டாக்கும் ஒரு மருந்தினை உடலில் செலுத்துவதன் மூலம் வேணற்கட்டியைக் குணமாக்குதல்

homogeneous : ஒருபடித்தான : ஒரே இனம் அல்லது வகையைச் சேர்ந்த உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக உடைய, எங்கணும் ஒரே மாதிரியான தன்மை கொண்ட

homosexual: (பாலின.) ஒரு பாலின விருப்பு: தன்னொத்த பாலினத்தவர் மீதே பாலின விருப்பு உடையவராக இருத்தல்

hone: (உலோ.) சாணைக்கல்: சவரக்கத்தி முதலியன தீட்டுவதற்கான தீட்டுகல்

hone or oilstone: சாணைக்கல் : கூர்ங் கருவிகளுக்கு வெட்டுவதற்குத் தேவையான கூரிய முனையை உண்டாக்குவதற்கு சாணை தீட்டுவதற்குப் பயன்படும் கல்

honey-comb: (குழை.) தேனடை பாணிப்பொருள்: தேன்கூடு போன்ற அறுகோண அமைப்புடைய உலோகத்தினாலான அல்லது பிசினால் செறிவாக்கம் செய்த காகிதத்தினாலான உள்மையப் பகுதி. சில விமானக் கட்டமைப்புகளுக்கு மிக இலேசான, ஆனால் மிகவும் வலுவான சேணங்களைத் தயாரிக்க இது பயன்படுகிறது. இவ்வகைப் பொருட்களில் சில, தனது எடையைவிட இரண்டுகோடி மடங்கு பாரத்தை கொண்டு செல்லக்கூடியவை

honey-comb radiator: (தானி.) தேன்கூட்டு கதிர்வீசி : இது முன்னும் பின்னுமாகவும், ஒன்றன் மேல் ஒன்றாகவும் அமையுமாறு ஒட்டவைக்கப்பட்ட ஏராளமான சிறிய அறைகளினாலானது. இந்த அறைகளைச் சுற்றி நுண்படலமாகத் தண்ணிர் பாய்ந்து, அவற்றில் பாய்ந்து செல்லும் காற்றினைக் குளிர்விக்கிறது

honey locust:(மர.)தேன் இலவங்கம்: நடுத்தர வடிவளவுடையமரம். பூவும் நெற்றும் அளிக்கக்கூடியது. இதன் வெட்டுமரம் கடினமானது; வலுவானது; மண்தொடர்புடன் நீண்டநாள் உழைக்க வல்லது. வேலிக்கம்பங்கள், கைப்பிடிகள், சக்கரக் குடங்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது

honing : (தானி.) சாணை தீட்டுதல் : எஞ்சின் நீள் உருளைகளை சாணைக் கற்களிலிருந்து தீட்டி வேண்டிய வடிவங்களாக உருவாக்குதல் அல்லது மெருகேற்றுதல்

hood : ஊர்தி முகடு (தானி.): (1) உந்து ஊர்தியின் இயக்கியை மூடி, கதிர் வீசியிலிருந்து தடுப்பு உந்து கட்டை வரையில் நீண்டிருக்கும் மடிப்பு முகடு

(2) கணப்படுப்பு, கொல்லுலை முதலியவற்றில் நீண்டிருக்கும் மூடி

hook bolt : (எந்.) கொக்கி மரையாணி : மரையில்லாத முனை U வடிவில் வளைந்து அல்லது மரையாணியின் உடற்பகுதிக்குச் செங்குத்துக் கோணங்களில் நேராக உள்ள ஒரு மரையாணி

hooked scale: (உலோ.) கொக்கித் தராசு : ஒரு முனையில் ஒரு சிறு கொக்கியும் மறுமுனையில் எடையைக் காட்டுவதற்கான முள்ளும் உடைய ஒருவகைத் தராசு

hooke's law : (பொறி.) ஹூக்ஸ் விதி : "மீட்சிம வரம்பினுள் உண்டாகும் உருத்திரிபு, தகைவுக்கு வீத அளவில் அமைந்திருக்கும்" என்னும் விதி

hook joint: கொக்கி மூட்டு: காட்