பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
345

சிப் பெட்டிகளின் கதவுகளுக்கான தூசி புகாதபடிக்கான மூட்டு

hook rule : (பட்.) கொக்கிச் சட்டம் : அலகுக்குச் செங்கோணங்களில் ஒரு முனையில் புறந்துருத்திய ஒரு துண்டினையுடைய சட்டம்

hook spanner : (எந்.) கொக்கிப் புரி முடுக்கி : புறப்பரப்பின் மீது வெட்டுத்தடமுடைய சுரையாணிகளில் பயன்படுத்துவதற்கான முடுக்குக் கருவி

hook up (மின்.) மின் இணைவு: ஒரு மின் சுற்றுவழியில் அல்லது சாதனத்தில் உள்ள உறுப்புகளுக்கிடையிலான இனணப்புகள்

hoop iron : இரும்புப் பட்டை : மிடாக்களை வரிந்திறுக்கும் இருப்புப் பட்டை

hopper : பெய் குடுவை : எந்திரங்தளுக்கு அல்லது ஊதுலைகளுக்குப் பொருள்களை ஊட்டுவதற்குப் பயன்படும் ஒரு கொள்கலம்

horizontal : கிடைநிலை : அடி வானத்திற்கு ஒரு போகாக அல்லது இணையாக உள்ள நிலை

horizontal axis : (கணி.) கிடைநிலை அச்சு

horizontal boiler : கிடைநிலை கொதிகலன் : செங்குத்தாகவும், நீளவாக்கிலும் தக்கவாறு அமைத்துக் கொள்ளத்தக்க இடைநிலைக் கதிர்ச் சலாகையுடைய கொதிகலன்

horizantal centre movement : (கணிப்.) கிடைகிலைத் துப்புரவுச் சீப்பு இயக்கம்

horizontal boring machine : (எந்.) கிடைநிலைத் துளையிடு எந்திரம் : துளையிடுவதற்கான கிடைமட்டக் கதிர் உள்ள ஒரு கருவி. இதனைக் கிடைநிலையிலும், செங்குத்து நிலையிலும் அமைத்துக் கொள்ளலாம்

horizontal centering : கிடைநிலை மையக் குவிப்பு: தொலைக் காட்சியில் எதிர்மின் கதிர்க் குழாயின் அச்சினைப் பொறுத்து படத்தின் அமைவு நிலை. ஒளிவாங்கிப் பெட்டியிலுள்ள ஒரு கட்டுப்பாட்டுக் கருவி மூலம் இதனை உருவாக்க முடிகிறது

horizontal drill press : (எந்.) கிடைநிலைத் துரப்பண அழுத்தப் பொறி: செங்குத்தாக அல்லாமல் கிடைநிலையில் இயங்குகிற துரப்பண அச்சுப்பொறி

horizontal hold control : கிடைநிலைப் பிடிக்கட்டுப்பாடு: தொலைக் காட்சி ஒளிவாங்கிப் பெட்டியில் கிடைநிலை அலைவீச்சு அலைப்பான், வாங்கும் படச்சைகையுடன் ஒருங்கிணைப்புச் சைகைகள் இயைபாக இருக்கும் வகையில் நேரமைவு செய்வதற்கான கட்டுப்பாட்டுக் கருவி

horizontal matrix printing : (கணிப்.) கிடைநிலை அச்சுவார்ப்பு அச்சடிப்பு

horizontal milling machine : கிடைநிலைத் துளையிடு எந்திரம் : கிடைநிலையான கதிரும், சுழலும் வெட்டுச் சக்கரமும் உடைய துளையிடும் எந்திரம். இது உலோகங்களில் இடுவரிசைத் துளைகள் இடுவதற்குப் பயன்படுகிறது. இதில் சமதளப்பலகையை வேண்டிய நிலைக்கு உயர்த்திக் கொள்ளவோ தாழ்த்திக் கொள்ளவோ முடியும்

horizontal polarization: (மின்.) கிடைநிலை முனைப்பாடு : ஒரு வானலை வாங்கியின் மின்னியல் புலமானது, பூமியின் மேற்பரப்புக்கு இணையாக இருக்குமாறு அமைக்கப்பட்ட வானலை வாங்கி