பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

horizontal return tubular boiler: கிடைநிலை மீட்சிக் குழாய்க் கொதிகலன்: . இது ஒரு வகை எஃகுக் கொதிகலன். இதில், நெருப்புக் குழாய்கள் உடைய நீள் உருளை வடிவ நுண்ணறைகள் இருக்கும். இவை செங்கற் கட்டுமானத்தால் மூடப்பட்டு, ஊதுலையாகவும், உள்ளெரி அறையாகவும் அமைக்கப்பட்டிருக்கும்

horn : (வானூ.) கொம்பு நெம்பு கோல் : விமானத்தின் கட்டுப்பாட்டுப் பரப்புடன் பொருத்தப்பட்டுள்ள ஒரு குறுகிய நெம்பு கோல். இதனுடன் இயங்கு கம்பி அல்லது சலாகை இணைக்கப்பட்டிருக்கும்

hornblende : பச்சைத் துத்தம்: திண்பழுப்பு அல்லது கருமை அல்லது பச்சை நிறமுடைய கணிப்பொருள். இதில், இரும்பு, மக்னீசியம், கால்சியம், அலுமினியம் ஆகியவற்றின் சிலிக்கேட்டுகள் அடங்கியிருக்கும்

horn center : கொம்பு மையம் : வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு சிறிய, வட்டவடிவான, ஒளி ஊடுருவக்கூடிய வட்டு. காகிதத்தில் வட்டங்கள் வரையும்போது காகிதம் கிழிந்துபோகாமல் இருப்பதற்காக, காகிதத்தின் மேல் இதனை வைத்துக் கவராயங்களைச் சுழற்றி வட்டம் வரைவார்கள்

horning press :(எந்.)கொம்பு அழுத்தப் பொறி : வாளிகள் போன்ற உலோகத் தகட்டினாலான கொள்கலங்களின் விளிம்புகளை மழுங்க மடக்குவதற்குப் பயன்படும் கருவி

horn relay : (தானி.எந்.) கொம்பு உணர்த்தி : கொம்பு வடிவ மின் சுற்றுவழியில் செலுத்தப்படும் ஒரு காந்தக் கட்டுப்பாட்டுச் சாதனம். இதில், கொம்புப் பொத்தானை அழுத்துவதால் அது ஒரு மின்னகத்தை நகரச் செய்து தொடர்பு முனைகளுக்கு மிக நெருக்கமாகக் கொணர்கிறது. இதனால் மின்னோட்டத்தின் முழு விளைவும் கொம்புக்கு அல்லது கொம்புகளுக்கும் நேரடியாகப் பாய்கிறது

horology : கடிகாரக் கலை : கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள் முதலியவற்றைத் தயாரித்தல், அவற்றைப் பழுதுபார்த்தல், மணிப் பொறிக்கலை, காலமளப்பது பற்றிய அறிவியல் துறையினையும் குறிக்கும்

horse (க.க.) தாங்கு சட்டம் : (1) சால்கால். (2) மிதிகட்டைகளும், படியின் நிலைக் குத்துப்பாதிகளும் இணைக்கப்பட்டுள்ள படித்தொகுதிகளை தாங்குகிற ஒரு சாய்வான ஆதாரம்

horse hair: குதிரை முடித்திண்டு: குதிரை முடியினை உள்திணித்து நிரப்பிச் செய்யப்பட்ட ஒரு திண்டு

horse power : குதிரைத் திறன் : எந்திரவியலில், ஒரு குதிரை வலிமைக்கு ஈடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு. 33,000 பவுண்டு எடையை, ஒரு நிமிட நேரத்தில் ஓர் அடி உயரத்திற்குத் தூக்குவதற்குத் தேவையான ஆற்றல் ஒரு குதிரைத்திறன் எனப்படும்

horse power rating : (தானி.) குதிரைத் திறன் வீத அறுதிப்பாடு: குதிரைத்திறன் அங்குலத்தில் துளைX நீள் உருளை எண்ணிக்கை/2.5- D2 x N / 2.5