பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
347

horse shoe magnet : (மி ன்) குதிரை லாடக்காக்தம் : குதிரை லாட வடிவில் அல்லது U-வடிவில் உள்ள ஒரு காந்தம்

hose clamp : நெகிழ்வுப் பற்றுக் கட்டை : ஒரு நெகிழ்வுக் குழாய்க்கும், அதன் முனை பொருத்தப்பட்டுள்ள நெகிழ்வுத் திறன் குறைவான பொருளுக்குமிடையில் இறுக்கமான பிணைப்பு ஏற்படுத்துவதற்கான ஒரு பற்றுக்கட்டை

hose coupling: நெகிழ்வு இணைப்பான்: நீண்ட நெகிழ்வுக் குழாய்களின் முனைகளை ஒன்றாக இணைப்பதற்காகப் பயன்படும் ஓர் இணைப்புச் சாதனம்

hot: மிகை ஒளிப்பரப்பு: தொலைக் காட்சியில் அளவுக்கு மிகுதியான ஒளியையுடைய அல்லது ஒளியைப் பிரதிபலிக்கிற பரப்பு

hot box : (எந்.) கடுவெப்பப் பெட்டி : தவறாகப் பொருத்திய தன் காரணமாக அல்லது குறைந்த மசகிடுதல் காரணமாக அளவுக்கு அதிகமாகச் சூடாகக் கூடிய தாங்கி

hot-die steel :வெப்ப வார்ப்பட எ.கு : பழுக்கக் காய்ச்சிய உலோகத்துடன் தொடர்புறுத்தி, வார்ப் புருக்களை அடித்து உருவாக்குதற்குப் பயன்படும் எஃகு

hot dipping : வெப்பத் தோய்ப்பு : சூடான் கரைசலில் தோய்த்துத் தூய்மையாக்கும் அல்லது முலாம் பூசும் முறை

hot embossing: (அச்சு) வெப்பப் புடைப்பகழ்வு வேலை : சூடாக்கிய வார்ப்புருக்களைப் பயன்படுத்தி புடைப்பகழ்வுச் சித்திர வேலைப்பாடு செய்தல்

hot metal : (வார்.) உருகிய உலோகம் : மிக உயர்ந்த வெப்ப நிலையில் உருகிய நிலையிலுள்ள இரும்பு அல்லது பித்தளை

hot plug: (தானி.) சுடர்ப் பொறிச் செருகி : நீண்ட பீங்கான் தொடர் அடுக்குகள் கொண்ட ஒரு சுடர்ப் பொறிச் செருகி. இது குறுகிய பீங்கான் தொடர் அடுக்குகளை விட அதிகச் சூடானது. எனவே, இதனை 'வெப்பச்செருகி' என்றும் கூறுவர்

hot rolled : (உலோ.) வெப்ப உருட்டு: எஃகினைச் சூடாக இருக்கும்போதே வணிகப் பயன்பாட்டிற்கான வடிவங்களில் உருட்டி உருவாக்குதல்

hot short : நொறுங்கு இரும்பு : சூடானபோது எளிதில் நொறுங்கத்தக்கதாகவுள்ள தேனிரும்பு. கந்தகம் கலந்திருப்பதால் தேனிரும்புக்கு இந்நிலை உண்டாகிறது. இதனால் இதனை இரும்பு மிகவும் கடினமாகவே பற்றவைக்க முடிகிறது; அல்லது பற்றவைக்க முடியாமல் போகிறது

hot wire ammeter: (மின்.) சுடு கம்பி மின்னோட்ட மானி : மின்னோட்டத்தின் வெப்ப விளைவினைப் பயன்படுத்திக் கொள்ளும் மின்னோட்டமானி. இதில் வெப்பத்தினால் ஒரு கம்பி நீட்சியடைந்து, ஒரு துலாத்தட்டின் முள்ளை நகர்த்துகிறது. இவ்வகை மின்னோட்ட மானியில் அடிக்கடி நேரமைவு செய்யவேண்டும். இதனால், இது இப்போது புழக்கத்தில் இல்லை

hot working steels : (உலோ.) வெப்ப வேலை எ.கு : 5-15% டங்க்ஸ்டன், சிறிதளவு குரோமியம், மிதமான அளவு கார்பன் அடங்கிய எஃகு சூடான் நிலையில்