பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
349

தப்புலத்துடன் அல்லது நிலை மின்னியல் புலங்களுடன் இணைக்கப்பட்டதன் விளைவாக ஏற்படும் ஒருவகைத் திரிபு

humidifier : (குளி.பத.) ஈரப்பதனாக்கி : காற்றில் ஈரப்பதனை அதிகமாக்கும் ஒரு சாதனம்

humidify : (குளி.பத.) ஈரப்பதனாக்கம் : காற்றில் அல்லது பிற பொருள்களில் நீராவியைச் சேர்த்திடும் செய்முறை

humidity : ஈரப்பதம் : காற்றிலுள்ள ஈரத்தின் அளவு. காற்றோடடத்திற்கான காற்றில் ஈர நயப்பூட்டுவதற்காக, அக்காற்றினை ஒரு நீர்ப்படலத்தின் வழியே செலுத்தி ஈரப்பதமாக்குவர்

humidity relative: (குளி.பத.) ஒப்பீட்டு ஈரப்பதன் : ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் காற்றில் எந்த அளவுக்கு ஈரப்பதன் அடங்கியிருக்கலாகுமோ அந்த அளவுடன் ஒப்பிடத்தக்க வகையில் உள்ள ஈரப்பதன் அளவு

humus : மட்கிய மண் : இலை தழை முதலிய தாவரப் பொருட்கள் அல்லது விலங்குப் பொருட்கள் மட்கிய தோட்ட மண்

hunting link : (தானி.) துருவ கண்ணி : ஒரு சங்கிலியில் ஒரு கண்ணியை எடுத்தோ, சேர்த்தோ நீளத்தைத் தக்கவாறு அமைப்தற்கு வசதியாகக் காலத்திட்டச் சங்கிலியைப் பிரிப்பதற்குரிய கண்ணி

hutch : (1) சிற்றறை : ஒரு சிறிய இருண்ட அறை

(2) பெட்டி - குழி முயல்களுக்கான பெட்டி
(3) அளவை
(4)சேமத்தட்டம்

hydrant : நெடுநீர்க் குழாய் : நீள்குழாயை இணைத்து நீர் கொண்டு செல்லும்படி பெருங்குழாயுடன் பொருத்தும் இணைப்பு வாயினையுடைய நீர்க்குழாய். இது தீயணைப்புக்குப் பயன்படுகிறது

hydrate : (வேதி.) சேர்மப் பொருள்: (1) தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்ப் பொருள்

(2) தனிமம் அல்லது சேர்மம் வகையில் நீருடன் இணைத்தல்

hydrate : காகிதக்கூழ் : நீர்த் தடுப்புக் காகிதமாகச் செய்வதற்குரிய ஊன் பசையாக்கிய கூழ்

hydrated lime : (க.க.) நீற்றிய சுண்ணாம்பு: கட்டுமானத்திற்குப் பயன்படும் சுண்ணாம்புத் தூள், இது பெரும்பாலும் 50-ராத்தல் கொண்ட பைகளில் கிடைக்கும். இது தேவையான திண்மைக்கேற்ப நீருடன் கலந்து பயன்படுத்தப்படும்

hydraulic brake : (தானி.) நீரழுத்தத் தடை: நீர் அழுத்தத்தின் மூலம் ஏற்படும் விசையினால் இயங்கும் எந்திரத் தடையமைப்புகள் கால் மிதியை அழுத்தும் போது, ஒரு சுழல்தண்டு ஒரு நீள் உருளைக்குள் அழுந்தி, அதிலுள்ள நீர்மத்தை (இயல்பு-திரிந்த ஆல்ககாலும் விளக்கெண்ணையும் கலவை) செப்புக் குழாய்களின் வழியாகப் பல்வேறு உறுப்புகளுக்கும் பாய்ச்சப்படுகிறது

hydraulic bronze : (உலோ.) நீரியல் வெண்கலம் : ஓரதர்கள் நீர் இறைப்பான் உறுப்புகள் முதலியவை செய்வதற்குப் பயன்படும் வெண்கலத்தை அல்லது பித்தளையைக் குறிக்கும் சொல்

hydraulic drive: (தானி.) இயக்கம் : (பார்க்க: நீர்ம இயக்கம்.)