பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

hydraulic engineer : பொறியாளர் : வடிகால் அமைப்புகள், நீரியல் பணிமானங்கள், அணைகள், நீரியக்க மின்விசை எந்திரங்கள் முதலியற்றை வடிவமைத்தல், நிறுவுதல், கட்டுமானம் செய்வித்தல் ஆகிய பணிகளில் தேர்ந்த வல்லுநர்

hydraulic glue : நீரியல் வச்சிரம் : ஈரப்பதத்தின் வினையைத் தடையுறுத்தும் இயல்புள்ள வச்சிரப்பசை

hydraulic jack : நீரியல் பாரத்தூக்கி : ஒரு சிறிய நீர் இறைப்பான் விசையால் இயங்கும் ஒரு பாரந்தூக்கி. இது வெளிப்புறத்தில் ஒரு நெம்புகோலால் இயக்கப்படும்

hydraulic lime : (க,க) நீரியல் சுண்ணாம்பு : கொண்ட பறையிலிருந்து இயற்கைச் சிமெண்டு தயாரிக்கப்படுவது போல் தயாரிக்கப்படும் ஒரு சுண்ணாம்புக் கிளிஞ்சல் போன்று நீற்றுவதற்குரியது. இது நீரியல் சிமென்ட் போன்று எளிதில் கெட்டியாகிவிடக் கூடியது

hydraulic press : (எந்.) நீரழுத்த எந்திரம்: நீர்விசை மூலம் இயங்கக் கூடிய ஓர் எந்திரம்

hydraulic ram : நீரியல் உயர்த்தி: இயங்கு நீரின் தடையாற்றல் மூலம் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு

hydraulics : நீரியல் : திரவங்களின் குறிப்பாக நீரின் இயக்காற்றல் பற்றிய அறிவியல்

hydraulic valve : நீரியல் ஓரதர்: நீரின் இயக்கத்தை ஒழுங்குறுத்துவதற்கும், நீரைப் பகிர்மானம் செய்வதற்கும் பயனாகும் ஓரதர்

hydro-barometer : நீர்ம எடைமானி : நீர்ம எடைமான ஒப்பீட்டளவினைக் காட்டும் கருவி. இது கடல் நீரின் ஆழத்தை அதன் அழுத்தத்தைக் கொண்டு அளவிட உதவுகிறது

hydrocarbon fuel : (விண்.) ஹைட்ரோகார்பன் எரிபொருள் : ஹைட்ரோகார்பன் இணைந்த கேசோலின், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்

hydrochloric acid : ஹைட்ரோ குளோரிக் அமிலம் : (HCl) எரிமலை உமிழும் வாயுக்களின் ஓர் அமைப்பானாக இயற்கையாகக் கிடைக்கிறது. வாணிக முறையில் கந்தக அமிலத்தை உப்புடன் வினை புரியச் செய்து தயாரிக்கப்படுகிறது. பற்றாசு வைப்பதில் உருகும் பொருளாகப் பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது

hydrocyanic : ஹைட்ரோசயனிக் அமிலம் : இதனை நீரசயனிக அமிலம்'என்றும் அழைப்பர்.தீவிர நச்சுத் தன்மையுடையது. நிறமற்ற வாயு அல்லது திரவ வடிவில் உள்ளது. பொட்டாசியம் சயனைடுச் செறிவுக் கரைசலை நீர்த்த கந்தக அமிலத்துடன் சேர்த்து வாலை வடித்து நீரில் ஈர்த்துக் கொள்வதன் மூலம் இது பெறப்படுகிறது

hydrodynamics : நீரியக்கவியல் : நீர், மற்றத் திரவங்கள் ஆகியவற்றின் இயக்கம், வினை பற்றிய விதிகளை ஆராயும் எந்திரவியல் துறை

hydroelectric : (மின். ) புனல் மின் விசை : நீராற்றலால் உண்டாக்கப்படும் மின்விசை

hydrofluoric acid : ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம்: (HF): எளிதில் தீப்பற்றக் கூடிய, நிறமற்ற, அரி