பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
351

மானமுடைய திரவக்கூட்டுப் பொருள். உலோக ஃபுளோரைடுகளையும், கந்தக அமிலத்தையும் இருமடிச் சேர்மானம் செய்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி, மட்பாண்டங்கள் ஆகியவற்றிலும் செதுக்குவேலை செய்தல், மதுவடித்திறக்குதல், நொதிமானம் ஆகியவற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது

hydrofoil or hydrovane : (வானூ.) நீரியல் இயக்கப் பரப்பு : நீரின் வழியாக இயங்குவதன் மூலம் வினைபுரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பரப்பு

hydrogen : (பற்.) ஹைட்ரஜன் : ஹைட்ரஜன் என்ற தனியொரு தனிமத்தினாலான ஒரு வாயு. மிகுந்த செயற்பாடுடைய வாயுக்களில் ஒன்று. இது ஆக்சிஜனுடன் இணையும்போது தீப்பிழம்பு உண்டாகிறது

hydrogen : (வேதி.) ஹைட்ரஜன் : இயற்கையில் மிகக்குறைந்த அளவில் கிடைக்கக் கூடிய வாயு. மற்றத் தனிமங்களுடன் இணைந்து ஏராளமான அளவில் கிடைக்கிறது. தூய்மையான நிலையில், நிறமற்றதாகவும், சுவையற்றதாகவும், மணமற்றதாகவும் உள்ளது

hydrogen bomp : (இயற்.) ஹைட்ரஜன் குண்டு : நீரகச்சேர்மம் செறியப் பெற்று உள்ளமைந்த அணுகுண்டினால் நீரகம் கதிரகமாக மாற்றப்படுவதன் மூலம் பெரும் விசையாற்றல் ஏற்படுத்தும் குண்டுவகை

hydrogenation : (குழை.) நீரகச் செறிவூட்டுதல்: ஒரு கூட்டுப் பொருளினுள் ஹைட்ரஜன் வாயுவினைச் செலுத்துவதற்குரிய ஒரு வேதியியல் செய்முறை

hydrolysis : (குழை.) நீரியல் பகுப்பாய்வு : நீரினைச் சேர்ப்பதன் மூலம் ஒரு பொருளைத் தனிக்கூறுகளாகப் பகுத்தல்

hydrolyte: (குளி.பத.) நீரியல் பகுப்பான்: நீரியல் பகுப்பாய்வுக்கு உட்படும் ஒரு பொருள்

hydromatic welding: நீரகப் பற்ற வைப்பு: இது ஒரு தடைப்பற்ற வைப்புச் செய்முறையாகும். இதில் தொடர்வரிசையிலுள்ள மின் முனைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் ஒவ்வொன்றும், பற்றவைப்பு மின்னோட்டக் கட்டுப்பாட்டுச் சாதனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நீரியல் வரிசைப்படுத்துக் கருவியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முழுமையான பற்றவைப்புச் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது

hydro mechanics : (இயற்.) நீரியக்க எந்திரவியல் : திரவங்கள், அவற்றில் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள பொருள்கள் ஆகியவற்றின் சமநிலை, இயக்கம் பற்றி ஆராயும் எந்திரவியலின் ஒரு பிரிவு நிலை நீரியல்,இயக்க நீரியல் ஆகியவை நீரியக்க எந்திரவியலின் பிரிவுகளாகும்

hydrometer : நீரிம எடைமானி: நீர்ம எடைமான ஒப்பீட்டளவு காட்டும் கருவி

hydrophobia: (நோயி.) நீர் வெறுப்பு நோய் : மனிதரை வெறி நாய் கடிப்பதால் உண்டாகும் நீர் வெறுப்பு நோய். இதனை 'வெறி நாய்க்கடி நோய்' என்றும்கூறுவர். இது மூளையையும் தண்டுவடத்தையும் தாக்கித் தசைகளை முக்கியமாகத் தொண்டைத் தசைகளைச் சுருங்கச் செய்கிறது. இதனால், தண்ணிர் குடிக்கும்போது அல்லது பெருத்த ஓசையைக் கேட்கும்போது பிரகாசமான ஒளியைப் பார்க்கும்போது உடலின்