பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'

354


I beam , (பொறி.) வடிவ உத்தரம்: I-என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த எஃகு உத்தரம், இது கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது

ice box: (குளி.ப.த.) குளிர்ப்பதன பேழை: பனிக்கட்டியைக் குளிர்விக்கும் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு குளிர்பதனப் பெட்டி

ice point : (குளி.பத.) உறை நிலை: இயல்பான அழுத்த நிலையில் நீர் பனிக்கட்டியாக உறையும் வெப்பநிலை

ichneumon files :ஒட்டுண்ணிப்பூச்சி : மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கு போன்ற நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சி வகை

icing : (தானி.) பணிப்படிவு : எரிபொருள் விரைவாக ஆவியாவதன் விளைவாக எரி-வளி கலப்பியில் பணி படிதல்

iconoscope: உருவமாற்றுக்குழாய்: ஒரு காட்சியின் ஒளியையும், நிழலலையும், மின்னியல் தூண்டல்களாக மாற்றுவதற்கெனத் தொலைக்காட்சி ஒளிப்படக்கருவியில் உள்ள ஒரு குழாய்

identification light : (வானு.) அடையாள ஒளி : இரவில் விமானத்தை அடையாளங்காட்டுவதற்தாக அதன் பின்புறத்தில் உள்ள,வெண்மையாகவோ வண்ணத்திலோ அமைந்துள்ள விளக்குகளின் தொகுதி

identity : (கணி.) முற்றொருமை / சர்வ சமம் : முற்றிலும் ஒத்துள்ள அல்லது சர்வ சமமான நிலை

idle circuit: (தானி) செயலற்ற மின்சுற்றுவழி :ஒர் எரி-வளி கலப்பியில் நீராவித் தடுக்கிதழ்

idler gear : (உலோ) காப்புப் பல்லிணை : ஒரு பல்லிணைத் தொடரில் இயங்கு பல்லிணைக்கும் இயக்கு பல்லிண்னைக்கும் இடையில் பொருத்தப்பட்டுள்ள பல்லிணை

idle wheel or Idler : (எந்.) காப்புப் சக்கரம் : திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவற்றுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்

idling : (தானி.) மெல்லியக்கம் : உந்து ஊர்தி இயங்காமல் இருக்கும்போது எஞ்சின் மெதுவாக இயங்குதல்

idling jet : (தானி) மெல்லியக்கத் தாரை : மெல்லியக்க வேகத்தில் எஞ்சினை இயக்குவதற்குத் தேவையான எரி பொருளின் (கேசோலின்) அளவினைக் கட்டுப்படுத்துகிற தாரை

igneous rock: எரிமலைப் பாறை : எரிமலை குமுறுவதால் உண்டாகும் வெப்பத்தினால் உருவாகும் பாறைகள். தீக்கல், கருங்கல்,படிகக்கல் முதலியவை இவ்வகையின