பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

னோடி : தனிநிலை அல்லது பன்னிலை வகையைச் சேர்ந்ததும், மாற்று மின்னோட்டத்தினால் இயக்கப்படுவதுமான ஒரு வகை மின்னோடி

alternating Current transformer : (மின்.) மாற்று மின்னோட்ட மின்மாற்றி : மாற்று மின் சுற்றின் மின்னழுத்தத்தின்ன் கூட்டவும் குறைக்கவும் பயன்படும் ஒரு சாதனம்; இதில் ஒரு அடிப்படைச் சுருணையையும், ஒரு துணை நிலைச் சுருணையையும் உடைய ஒரு துரண்டு சுருள் இருக்கும். அது ஓர் இரும்பு உட்புழையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

alternating current transmission: (மின்.)மாற்று மின்னோட்டச் செலுத்தீடு: மாற்று மின்னோட்டத்தைப் பயன்படுத்தி மின் விசையை செலுத்தீடு செய்தல்

alternation: (மின்.) மாறி மாறித் தொடர்தல்: மாற்று மின்னோட்டத்தினால் உண்டாகும் மாறுதல்கள். இதில், மின்னழுத்தம், மிகக் குறைந்த அளவிலிருந்து மிக அதிகமான நேர்முனை அழுத்தத்திற்கு உயரும் பின்னர் பூச்சியத்திற்கு இறங் குழ் மறுபடியும் மிக அதிகமான எதிர்முனை அழுத்தத்திற்கு உயரும். இவ்விதம், இருமுறை முழு மையாக மாறுவதே ஒரு சுழற்சி அலைவு எனப்படும்

alternator (மின்.) மாற்று மின்னாக்கி : மாற்று மின்னோட்டத்தை உண்டாக்கும் ஒரு மின்னாக்கி

altimeter : (விண்.) உயரமானி : வாயுமண்டல அழுத்தத்தின் மூலம் உயரத்தைக் காட்டும் உயரமானி

altigraph : (வானூ,) உயர வரையமைவு : பதிவு செய்யும் பொறியமைவினையுடைய ஒர் உயர மானி. இப்போதுள்ள சாதனங்கள் அனிராய்டு வகையின. இதில், கடிகார இயக்கத்தின்மூலம் பதிவாகும் வரைபடம். அடி அல்லது மீட்டர் கணக்கில் பகுக்கப்பட்டிருக்கும். இது உயரங்களைக் கணக்கிடுவதற்குரிய ஒர் அழுத்த வரைவியாகும்

altitude : குத்துயரம் : செவ்வுயர அளவு, மிக உயர்ந்த சிகரம்

alum : (வேதி.) படிக்காரம் : ஒரு கடுத்தமான கனிய உப்பு. அலுமினியம், பொட்டாசியம் ஆகியவற்றின் சல்பேட்டு அடங்கிய இரட்டைச் சல்பேட்டு

alumen : (உலோ.) அலெமென் : வலுவான அலுமினிய உலோகக் கலவை. இதனை காய்ச்சி உருக்கி, வடிவங்கள் உருவாக்கலாம். எந்திரத்தினால் இயக்கலாம். இது 88% அலுமினியமும், 10% செம்பும் கொண்டது. இது அலுமினியத்தைவிடக் கனமானது

aluminium oxide; அலுமினியம் ஆக்சைடு : அலுமினியத் தாதுவாகிய பாக்சைட்டை உயர்ந்த வெப்ப நிலையில் உருக்குவதன் மூலம் கிடைக்கும் கடினமானதும் கூர்மையானதுமான உராய்பொருள்

alumina, or oxide of aluminium : (வேதி.) அலுமினிய உயிரகை அல்லது அலுமினியம் ஆக்சைடு: தூய்மையற்ற அலுமினியக் கணிமக் கலவை மண் வகையில் ஒரு முக்கியமான அமைப்பான். இது, செங்கற்சூளை, உலைப் பூச்சுகள் ஆகியவற்றின் தகுதிறத்தை நிருணயிக்கக்கூடியது. 'அரக்கு வண்ணம்' எனப்படும் வண்ணப் பொருள் செய்யவும் பயன்படுகிறது. சாயவேலைகளிலும், காலிக்கோ அச்சு வேலைகளிலுங்கூடப் பயன்படுகிறது. உராய் பொருளாகவும் பெரிதும் பயனாகிறது. மிக அதிக விறைப்பாற்றல் வாய்ந்த உலோகங்கள், உலோகக் கலவைகளை வெட்டுவதற்கும், அவற்