பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தில் அச்செழுத்துக்களை அல்லது அச்சுப்படங்களைப் பதிவு செய்தல்

impression screws : (அச்சு) அச்சுப்பதிவுத் திருகாணிகள் : அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளத்தின் நிலையை வேண்டியவாறு அமைப்பதற்குப் பயன்படும் திருகாணிகள்

imprint : (அச்சு.) பெயர் விவரப் பொறிப்பு : ஓர் அச்சு வெளியீட்டினை அச்சடித்தது யார் என்ற விவரம் அடங்கிய அடையாள முத்திரை

impulse: (தானி. எந்) உந்து வேகம்: உந்து ஊர்தி எஞ்சினிலும், விமான எஞ்சினிலும் வேகத் தைத் தூண்டிவிடுவதற்கான உந்து விசையாற்றல்

impurity: (மின்.) மாசுப் பொருள்: ஒரு படிக வடிவத் திடப்பொருள் உள்ள அப்படிகத்திற்குப் புறம்பான அணுக்கள்

:inboard stabilizing float : (வானூ) மைய நிலைப்படுத்து மிதவை:' கப்பலில் பிரதான மித வைக்கு அல்லது உடற்பகுதிக்கு மிக நெருக்கமாகப் பொருத்தப்பட்டுள்ள நிலைப்படுத்து மிதவை

incandescence : வெண்ணொளி: மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் உணடாகும் வெண்சுடர் ஒளி

incandescent : வெண்சுடர் வீசுகிறது: வெப்பத்தோடு வெண்சுடர் வீசுகிற பொருள்

incandescent lamp: (மின்) வெண்சுடர் விளக்கு : உருகாத மின்கடத்து பொருளினாலான இழையை அல்லது கம்பியை உடைய மின்விளக்குக் குமிழ்

incarnadine : திசை நிறமுடைய : சாய வகையில் சதை விண்ணம் முதல் மிகச்சிவப்பு வரையிலான வண்ணச் சாயல்கள்

incinerator : (க.க) நீற்றுலை : குப்பை கூளங்களை எரிப்பதற்கான தொட்டி

incise: (க.க.) வெட்டு; செதுக்கு: வெட்டுதல், செதுக்குதல்

incised work : (அ.க) செதுக்கு வேலைப்பாடு : செதுக்கு வேலைப்பாடு செய்யப்பட்ட பொருள்

inclination : சாய்வு: கிடைமட்டத்திற்குச் சாய்வாக உள்ள சரிவு

inclined plane: சாய்வு மட்டம்: கிடைமட்டத் தளத்திற்குச் சாய்வாக உள்ள தளம். இந்தச் சரிவின் கோணம் சாய்வுக் கோணமாகும்

inclinometer: (வானூ) சாய்வு மானி: விமானம் பறக்கும் உயரத்தைக் காட்டும் கருவி. விமானத்தின் முன்புற-பின்புற அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்துடனான சாய்வினைக் காட்டுவதற்கேற்ப அல்லது கிடைமட்ட அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்துடனான அல்லது இரு தளங்களுடனுமான சாய் வினைக் காட்டுவதற்கேற்ப சாய்வு மானியை முன்-பின் மானி, கிடைமட்டச் சாய்வுமானி, பொதுநிலைச் சாய்வுமானி என வகைப்படுத்துவர்

inclusions: (உலோ.) சேர்மானங்கள்: முடிவுற்ற நிலையிலுள்ள எஃகில் எஞ்சி நிற்கும் கசடு மற்றும் அயல் பொருள்கள்

increaser: (எந்.) விரிவாக்கி: ஒரு பொருளின் வடிவளவு, வலிமை முதலியவற்றை அதிகரிக்கும் ஒரு சாதனம். குழாய் பொருத்து வேலைகளில் ஒரு முனை மற்றதைவிட பெரி தாகவுள்ள இணைப்பிகள்