பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
359

increment : மிகைப்பாடு : மாறுபடு தொகையில் இரு நிலைகளுக் கிடையிலான உயர்வுத்தொகை

incrust: (அ.க.) மேலடை: ஒரு பிரதான மேற்பரப்பின் மீது அலங்காரப் பொருளினால் கடினமான மேற்பூச்சு பூசுதல். மரச்சாதனங்களில் மேலடை மெல்லொட்டுப் பலகையிடுதல்

incrustation : (பொறி) படலமிடுதல்: நீராவிக் கொதிகலன்களில் உட்புறத்தில் படலமிடுதல்

incubation period : (நோயி) நோய்க்கிருமி பெருக்க காலம்: உடலில் பாக்டீரியா நுழைவதற்கும், நோய்க்குறிகள் தான்றுவதற்கு மிடையிலான காலம்

incus (உட.) காதெலும்பு : சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காது எலும்பு

indefinite ; வரையற்ற: துல்லிய மற்ற, அறுதியற்ற, தெளிவற்ற

indent : (அச்சு:) ஓர வெற்றிடம்: அச்சுத் துறையில் ஓரத்தில் வெற்றிடம் விட்டு வரிகளைத் தொடங்தல்

indentation : விளிம்பு வெட்டுதல்: அறைகலன் ஓரங்களில் வளைவு நெளிவுடைய விளிம்பு வெட்டுதல்

indention: (அச்சு.) ஓரவெட்டீடு: ஒரு பத்தியின் தொடக்க வரிபோல் விளிம்பிலிருந்து உள் தள்ளி அமைக்கப்படும் வரிகள். மற்ற வரிகளைவிட முதல் வரி நீண்டிருக்குமானால் அது "தொங்கல் ஓரவட்டீடு" எனப்படும்

indenture : சட்ட முறையாவணம்: (1) ஒரு தொழில் பயிலுநரை வேலை தருநருடன் பிணைக்கும் ஒரு சட்ட முறை ஒப்பந்தம்

(2) ஓர் ஒப்பாவணம், அடைமானம் அல்லது குத்தகை. இத்தகைய ஆவணங்கள் முன்னர் வரை தோலில் எழுதப்பட்டதால் இந்தப் பெயர் பெற்றது

independent jaw chuck : தற்சார்புத் தாடைக் கவ்வி: ஒன்றுக்கொன்று சார்ந்திராமல் சுதந்திர மாக நகரும் தாடைகள் கொண்ட ஒரு தாடைக்கல்வி

independent wheel suspension : (தானி.) தற்சார்புச் சக்கரத் தொங்கல் நிலை: உந்து ஊர்திகளின் முன் சக்கரங்களின் தொங்கல் நிலை. இதன் மூலம் சக்கரங்கள் சாலை அதிர்ச்சிகளுக்கேற்பச் செயல்புரியும் அல்லது ஒன்றுக் கொன்று சார்ந்திராமல் சுதந்திரமாக இயங்கும்

indastructibility : (இயற்) அழிவின்மை : பொருள்களின் அழிக்க முடியாத தன்மை

index : (அச்சு.) பொருட் குறிப்பகராதி : ஒரு புத்தகத்தில் அச்சிடப் பட்டுள்ள இனங்களை அல்லது பொருள்களை அகரவரிசையில் அமைந்த பட்டியல். இது தேவையான பொருளை எளிதாகக் கண்டு கொள்ள உதவும்

iodex die : (பட்.) பகுப்புப் பொறிப்புக் கட்டை : பெரிய வட்டத் தகடுகளின் விளிம்புகளை வெட்டுதல். மின்னகங்களுக்குத் துளையிடுதல் போன்ற சில்வகை வேலைப்பாடுகளுக்குச் சிலசமயம் பகுப்புப் பொறிப்புக் கட்டை பயன்படுத்தப் படுகிறது. இதில் ஒரு சுழலும் பொறிப்புக் கட்டை அமைந்திருக்கும். இது அழுத்து பொறியில் ஒவ்வொரு முறையும் அழுந்தும்போது படிப்படியாக விளிம்புத்தடம் பொறிக்கப்படுகிறது

index head or dividing head : (எந்.) பகுப்பு முகடு : ஓர் எந்திரத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் ஓர் எந்திரச் சாதனம். ஒரு வட்ட