பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

வடிவ உருப்படிவத்தைச் சமபகுதிகளாகப் பகுப்பதற்கு இச்சாதனம் பயன்படுத்தப்படுகிறது

indexing : (எந்.) பகுப்பீடு : பள்ளம் வெட்டுதல். நீள் வரிப்பள்ள மிட்ட வேலைப்பாடு, பல்லிணை வெட்டுதல் போன்ற நோக்கங் களுக்காக ஒரு வட்டத்தை சீரான இடைவெளி களில் பகுத்தல்

india ink : இந்திய மை : உரு வரைபடங்கள் வரைபவர்கள் பயன்படுத்தும் கருநிறப் பொடியாலான எழுதும் மை

india rubber :ரப்பர் : வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து ஊறும் மரப்பால் உறைவிலிருந்து எடுக்கப்படும் தொய்வகத்துண்டு. இது தொழில்களில் மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது

indicate : சுட்டிக்காட்டு : விளக்கிக் சுருக்கமாகக் கூறு

indicated horse - power: (பொறி.) சுட்டளவுக் குதிரைத் திறன் : ஒரு சுட்டளவி வரைபடத்திலிருந்து தீர்மானிக்கப்படும் குதிரைத் திறன்

indicating switch : (மின் ) சுட்டிக் காட்டு மின்விசை : மின் னோட்டம் பாய்வதை அல்லது பாயாமலிருப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு விசை

indicator ; (பொறி). ) சுட்டளவி: ஓர் எஞ்சினின் உந்து தண்டிலுள்ள அழுத்தத்தையும், இயக்கத்தையும் சுட்டிக்காட்டும் கருவி

indicator card : (பொறி) சுட்டளவி அட்டை : ஒரு சுட்டளவி நீள் உருளை அல்லது உந்து தண்டின் மீது சுற்றப்பட்டுள்ள காகிதம். இக்காகிதத்தில் சுட்டளவின் வரைபடம் வரையப் படுகிறது

indicator diagram : சுட்டளவி வரைபடம் : ஒரு சுட்டளவி அட்டையின் மீது அச்சுட்டளவி யிலுள்ள பென்சில் வரையும் வரைபடம்

indirectly heated : (மின்) மறைமுக வெப்பமூட்டம் : தனது எதிர்முனைக்கு தனி வெப்ப மூட்டியைப் பயன்படுத்தும் ஓர் எலெக்ட்ரான் குழல்

indirect lighting: (மின்) மறைமுக ஒளியமைப்பு : ஒளியை முகட்டில் அல்லது வேறேதேனும் பரப்பில் விழும்படி செய்து, அந்த ஒளி சிதறி அறைக்கு ஒளியூட்டுமாறு அமைக்கப்படும் ஒளி அமைப்பு முறை

indirect radiation: (இயற்) மறைமுக வெப்பூட்டம்: ஒரு மைய வெப்பூட்டும் எந்திரத்திலிருந்து, காற்றை தேவையான வெப்ப நிலைக்குச் சூடாக்கி, அந்தக் காற்றிணைப் புழைப்பகிர்மான அமைப்பின் மூலமாக வெப்பம் தேவைப்படுகிற இடத்திற்கு அனுப்பிச் சூடாக்கும் முறை

indium: (உலோ.) இண்டியம்: மிக அரிதாகக் கிடைக்கும் ஒருவகை உலோகம். இது மிகவும் பளபளப்பானது:வெண்மை நிறமுடையது; மென்மையானது; எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக்கூடியது. இதன் விலை மிகவும் அதிகம் என் பதால், பரிசோதனை நோக்கங்களுக்கு மட்டுமே இது பயன்படுகிறது

individual drive (எந்) தனிநிலை இயக்கம்: ஒவ்வொரு அலகும் நேரடி உந்து இயக்கத்தால் இயங்குவதைக் குறிக்கும். இது ஒரு வரிசைச் சுழல் தண்டிலிருந்து எதிர் சுழல் தண்டு மூலமாக இயங்குவதற்கு எதிரானது

indraft (வானூ.) உள்ளீர்ப்பு: விமானத்தில் முன்புறமுள்ள முற்