பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
361

செலுத்தியிலிருந்து அலகுகளுக்கு உள்நோக்கிப் பாய்தல்

induced angle of attack: (வானூ.) தூண்டு தாக்குறவுக் கோணம்: ஒரு விமானத்தின் உள்ள படியான தாக்குறவுக் கோணத்திற்கும், அதே குணக உயர்த்திக்கான உடற்பகுதியின் வரம்பற்ற நோக்குக் கோணத்திற்குரிய தாக் குறவுக் கோணத்திற்குமிடையிலான வேறுபாடு

induced currenti (மின்) தூண்டு மின்னோட்டம்: பார்க்க: மின் தூண்டல்

induced draft: (பொறி) தூண்டு இழுவை: உயர்த்துவதன் காரணமாக உண்டாகும் செயற்கையான பார இழுப்பு

induced drag: (வானூ) தூண்டு இழுப்பு: உயர்த்துவதன் காரணமாகத் தூண்டப்படும் இழுவையின் ஒரு பகுதி

induced magnetism: (மின்) தூண்டு காந்த விசை : பார்க்க மின்தூண்டல்

Induced voltage; (மின்) தூண்டு மின்னழுத்தம்: ஒரு கம்பியுடனோ, கம்பிச்சுருளுடனோ அல்லது மின்சுற்று வழியுடனோ இணைக்கப்பட்டுள்ள மாறுகிற காந்தப் புலன் மூலமாக உண்டாகும் மின்னழுத்தம்

inductance : (மின் ) மின் தூண்டம் : ஒரு மின்சுற்று வழியின் மூலமாக உண்டாகும் மொத்த மின் தூண்டலுக்கும், அதில் உண்டாகும் மின்னோட்டத்திற்குமிடையிலான விகிதம் ஒரு மின் சுற்றுவழி மூலமாகப் பாயும் மின்னோட்டத்தில் மாற்றத்தை எதிர்க்கும் திறன்

induction : (மின்) மின் தூண்டல் : அணுக்க நிலை மின் பாய்வு. காந்தமேற்றிய பொருட்களின் அல்லது ஒரு மின்கடத்தியிலுள்ள மின்னோட்டத்தின் மிக்க அணுக்கத்தினால், ஆதன் அருகேயுள்ள காந்தப்புலத்தில் ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் காந்தமேற்றம் அல்லது மின்னேற்றம்

induction brazing : மின்தூண்டல் பற்றவைப்பு : மின்னியல் முறையில் பற்றவைப்பு செய்யும் ஒரு முறை, இதில் தூண்டு மின்னோட்டத்திலிருந்து வெப்பம் உண்டாக்கப்படுகிறது

induction coil : (மின்) தூண்டு சுருள் : அணுக்க மின்பாய்வு மூலம் நேர்மின்னோட்டத்தை மாற்று மின்னோட்டமாக மாற்றுவதற்கான ஒரு மின் சுருள்

induction compass : (வானூ) மின்தூண்டல் திசைகாட்டி : இது ஒரு வகை திசை காட்டி, இதில், பூமியின் கர்ந்தப்புலனைச் சுற்றிச் சுழலும் ஒரு மின்சுருளில் உண்டாகும் மின்னோட்டத்தைப் பொறுத்துக் குறியீடுகள் காட்டப்படுகின்றன

induction motor: (மின்.) தூண்டு மின்னோடி: மாறிமாறி வரும் மாற்று மின்னோட்டம். இதன் மூலம் உண்டாகும் மின்னோட்டங்கள், நிலைமின் சுருள்கள் வேகமாக மட்டுமே செலுத்தப்படுகின்றன. நிலை மின் சுருள்கள் மூலம் உண்டாகும் மாறும் காந்தப் புலத்தினால் தூண்டப் பெறும் மின்னோட்டங்களி னால் சுழற்றப்படும் சுழலி

inductive circuit: (மின்) தூண்டு மின் சுற்றுவழி : ஒரு மின்சுற்றுவழி, மின்னோட்டம் மாறுபடும்போது கணிசமான அளவு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது

inductive load : (மின்) தூண்டு மின்சுமை : மின்னழுத்தத்தைவிட