பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

itallic: (அச்சு.) அச்செழுத்து: வலப்பக்கம் சாய்ந்த அச்செழுத்து, முக்கியமான குறிப்புகளை எடுப்பாகக் காட்ட இது பயன்படுத்தப்படுகிறது. இத்தாலிய அச்சுப்பணியாளர் ஒருவரால் 1501-இல் இது வழக்காற்றுக்குக் கொண்டுவரப்பட்டது

ivory: தந்தம்: யானை, நீர் யானை, கம்பிளி யானை, திமிங்கிலம் முதலிய விலங்குகளின் மருப்பு. இது அலங்கார வேலைப் பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது

ivory black: தந்தப் பொடி: எரிக்கப்பட்ட தந்தத்திலிருந்து கிடைக்கும் கறுப்புப் பொடி ஒருவகை வண்ணச் சாயத்திற்கும் இந்தப் பெயர் உண்டு