பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
375
J

jack : (எந்.) தூக்கிப்பொறி : அதிக அளவுப் பாரங்களை மிகக் குறைந்த அளவு மனித ஆற்றலைப் பயன்படுத்தி குறுதிய உயரத்திற்கு உயர்த்துவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

தூக்கிப் பொறி

jack arch : தூபிக்கவான் : வழக்கமான தட்டையான கவான். "ஃபிரெஞ்சுக் கவான்' என்றும் கூறுவர்

jack, electric : மின்தொடுமுனை : ஒருவகை உலோக விற்சுருள் தொடுமுனை.ஒரு நூல் கயிற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு செருகியைச் செருகுவதன் மூல்ம் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தொலைபேசி விசைப்பலகைகளிலும், வானொலிகளிலும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது

jacket : (எந்.) உறையுள் : வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை. இது ஒர் உந்து நீள் உருளையைச் சுற்றி நீர் பாயச் செய்து வெப்பம் அல்லது குளிர்ச்சி பாதுகாக்கப்படுகிறது

jack, hydraulic (பட்.) நீரியல் பாரந்துக்கி : எடையைத் தூக்கு வதற்கான சாதனம். நீரில் அல்லது திரவத்தில் அழுத்தம் செலுத்துவதன் மூலம் பாரம் மேலே தூக்கப்படுகிறது

jakging Up : உயர்த்துதல் : பெரிய வடிவளவிலுள்ள எந்திரங்களையும் கனத்த கட்டுமானங்களையும் தூக்கிப்பொறியின் துணையுடன் உயரே தூக்குதல்

jack leveling (பட்.) : சரிமட்டத் திருகுப் பொறி : எந்திரத்தின் பகுதிகளை மயிரிழை கூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்குபடுத்தும் சரிமட்டத் திருகுப்பொறி

jack plane : கட்டை விமானம் : கரடுமுரடான வேலைகளுக்குப் பயன்படும் வானூர்தி

(2) திருகு தளம்: வெட்டு மரத்தைத் தேவையான வடிவளவுக்குக் கொண்டு வருவதற்கு இழைப்பதற்கெனப் பயன்படும் தளம்

jack rafter : (க.க) குறு உத்திரம் : கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம்

jackscrew : (எந்) திருகுப் பொறி : பற்றுக் கருவிகளில் வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள்களைப் பற்றியவாறு இழைப்பதற்குப் பயன்படும் சிறிய திருகுப் பொறி

jamb : (க.க.) புடைநிலை : வாயிலின் புடைநிலை அல்லது பலகணியின் பக்க நிலை; பலகணித் தளச் சரிவு

jamming : (எந்.) வானொலி இடையீடு : வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்தில் செயலாற்றுவதன் மூலம் செய்திகளைத் தெளிவற்றதாக்குதல்

jam nut : (எந்.) : நெருக்கு மறையாணி: இது பூட்டு மறையாணி போன்றது

jam plate : (பட்.) நெருக்குத் தகடு : திருகுத் தகட்டுக்குரிய பழைய பெயர். இதில் திருகிழைகள் வெட்டப்படாமல் நசுக்கி ஏற்படுத்தப்பட்டிருக்கும்