பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

japan : திண்சாயம் : திண்ணிய சாய எண்ணெய்

japan drier : ஜப்பானிய உலர்த்தி : லினோலெனிக் அமிலத்தின் (C17 H29 HCO2, H), ஒர் உப்புப் பொருளாகிய லினோலியேட் அல்லது ஈய அல்லது மாங்கனீஸ் பிசின் பொருள்களை கற்பூரத் தைலம் அல்லது பென்சின் திரவத்தில் கரைத்துக் கிடைக்கும் சாயப் பொருள். விரைவில் உலர்வதற்காகச் சாயப் பொருட்களுடன் சேர்க்கப்படுகிறது

japanning : (வண்.சாய.) மெருகு வேலைப்பாடு : மரம் அல்லது உலோகப் பொருள்களில் கெட்டியான மெருகெண்ணெயை மேற் பூச்சுப் பூசி கறுப்பாகவும் பளபளப்பாகவும் ஆக்குதல். மரங்களில் குறைந்த வெப்பத்தில் பூசலாம். உலோகத்தில் 300-400°F வெப்ப நிலையில் பூசப்படுகிறது

iardiniere:(அ.க.) பூங்குடுவை : மரத்தாலோ, மண்ணாலோ, உலோகத்தாலோ செய்யப்பட்ட அழகுப் பூங்குடுவை மலர்த் தொட்டி

jarno taper : (எந்.) ஜார்னோ கூம்பு : ஒரடி 1/2" கூம்பு உள்ள இந்தக் கூம்பு எந்திரக் கருவிகளில் பயன்படும் கூம்புத் தமருசிகள், குதை குழிகள், எந்திரத் தண்டுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது

jarring machine : (வார்.) முரணியக்க வார்ப்புப் பொறி : முரண் பட்ட இயக்கத்தின் மூலம் வார்ப்படங்களை அடித்து இறுகுவதற்குப் பயன்படும் ஒருவகை வார்ப்பட எந்திரம். இதனை 'குலுக்கு எந்திரம்' என்றும் கூறுவர்

jaundice : (நோயி.) மஞ்சள்காமாலை நோய் : இரத்தத்தில் பித்தநீர் கலப்பதால் அல்லது சிவப்பு இரத்த உயிரணுக்கள் உடைவதால் உண்டாகும் நோய். இதனால் தோல் மஞ்சள் நிறமாகும்

jaw chuck : தாடை இடுக்கி : கடைசல் எந்திரத்தில் உள்ள ஒரு இடுக்கி. இதில் வேண்டியவாறு நகர்த்தக் கூடிய தாடைகளுடன் ஒரு முகப்புத் தகடு அமைந்திருக்கும். இதில் உள்ள தாடைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ ஒன்றாகவோ நகர்த்தலாம்

jenson : (அச்சு.) ஜென்சன் அச்செழுத்து : இது ஒருவகை அச்செழுத்து. இதனை முதல் முதலில் 15 ஆம் நூற்றாண்டில் ஃபிரெஞ்சு அச்சுக் கலைஞர் புகுத்தினார். அவர் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது

jet தாரை : (1) பீற்றுக் குழாய் நுனி

(2) பீற்றுப் பொருள்

jet aircraft : (வானூ.) தாரை விமானம் : ஒரிரு தாரை எஞ்சின்கள் மூலம் பீற்று விசை பெற்று இயங்கும் விமானம் அல்லது வான்கலம்

jetavator : (விண்.) தாரைத் திசை மாற்றி : ராக்கெட்டின் தாரையோட்டத்தினுள் அல்லது அதற்கு எதிராக இயங்கும்படி செய்யக்கூடிய ஒரு கட்டுப்பாட்டுச் சாதனம். இது, தாரை ஓட்டத்தின் திசையை மாற்றுவதற்குப் பயன்படுகிறது

jet engine : (வானூ.) தாரை எந்திரம் : வாயுவை அல்லது பாய்மரத்தைத் தாரையாகப் பீற்றி வெளிப்படுத்தும் எந்திரம். இதன் பீற்று விசையால் விமானம் முன்னே செலுத்தப்படுகிறது

jet moulding : (குழை.) தாரை வார்ப்படம் : வெப்பமூட்டப்பெற்ற நிலையில் உருக் கொடுக்