பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
377

கப்படும் பொருளுக்கான தொடர்ச்சியான வார்ப்படச் செயற்பாட்டு முறை. இதில், அமைப்பான உட்செலுத்தப்படுவதற்கு முன்னர் சூடாக்கப்பட்டு, அதன் வெப்பம் சீரான முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது

jet propulsion : (வானூ) (தாரை முற்செலுத்தம்) : எண்ணெயுடன் காற்றைக் கலக்கும்படி செய்து தீ மூட்டி, சூடான எரிந்த வாயுக்களைப் பின்புறமாக அனுப்பி, விமானத்தின் முன்புள்ள காற்றை உறிஞ்சுவதன் மூலம் விமானத்தை முன்னே செலுத்தும் உந்து விசை, இதில் பயன்படும் எஞ்சின் முழுவதும் தாரை எஞ்சின்

jet steering : (விண்) தாரை இயக்கி : (விண்.) விண் வெளிக் கலத்தைத் தேவையான வளை வீச்சு நெறியில் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் நிலையான அல்லது அசையும் தாரைகள்

jet stream : (விண்.) தாரை ஒழுக்கு : ஒரு தாரை எஞ்சினிலிருந்து அல்லது ராக்கெட் மின்னோடியிலிருந்து உள்ளெரிதல் மூலம் வெளிப்படும் வாயு அல்லது திரவத் தாரை ஒழுக்கு

jetty : அணைகரை : துறை முகத்தை அல்லது கடற்கரையைப் பாதுகாப்பதற்கு, நீரோட்டத்தின் திசையைத் திருப்புவதற்கென நீருக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் கல்லால் அல்லது மரத்தால் அமைக்கப்படும் கட்டுமானம்

jewelers saw : பொற்கொல்லர் இரம்பம் : உலோகங்களை அறுப்பதற்குப் போதிய வலுவுடன் பற்கள் கொண்ட இரம்பம்

jeweling : அணிமணி ஒப்பனை : ஒரு மேற்பரப்பில் அணிமணிகளை ஒத்திருக்குமாறு அலங்கார வேலைப்பாடுகள் செய்தல்

jewel bearing : (மின்.) மின்மணிக்கல் தாங்கி : கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகளில் தாங்கிகளாகப் பயன்படுத்தப்படும் மணிக்கற்கள்

jib : (எந்.) (1) பாரந்துக்கிக் கை : பாரந்துக்கியில் ஆடிக்கொண் டிருக்கும் கை போன்ற கருவி

(2) முக்கோணப் பாய் : கப்பலின் பாய் முகட்டிலுள்ள நிலவரமான முக்கோணப் பாய்

jib crane : கை ஓந்தி : ஊசலாடும் உந்து கட்டை அல்லது கை போன்ற கருவியுடைய ஒரு பாரந் தூக்கி

jig : (எந்.) பிடிகருவி : கைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

jig boring : (எந்.) தவ்வித்து அகழ்தல் : வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளை ஒரு பிடி கருவியால் பிடித்துக் கொண்டு, அந்தப் பிடி கருவியின் ஒரு பகுதியினைச் செலுத்தி அக்ழ்வு செய்தல்.இது துரப்பணத்தால் செய்யப்படும் பணியிலிருந்து வேறுபட்டது

jig bushing : (எந்.) தவ்வி உழல்வாய் : துரப்பணங்களைச் செலுத்துவதற்கு ஒரு பிடி கருவியின் முகப்பில் செருகப்பட்டுள்ள கடின எஃகினாலான உழல்வாய்

Jig drill : (பட்.) துரப்பணத் தவ்வி : துரப்பண வேலையின்போது பிடித்துக் கொள்வதற்காக அழல் வாய்கள் கொண்ட ஒரு சாதனம். இந்த அழல் வாயின் வழியாக துரப்பணம் செய்யப்பட்டு துரப்பணம் செய்யப்படும் பொருளில் துளைகள் துல்லியமாக அமையுமாறு செய்யப்படுகிறது

Jigger : (எந்.) ஏற்றி இறக்குக் கருவி : ஒர் இரட்டைக் கம்பியும்