பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

கயிற்றோடு கூடிய ஏற்றி இறக்கும் கருவி அமைவு

Jig saw : (மர.) திருகுவாள் : எந்த வடிவத்தையும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக்கூர்வாள்பொறி

Jimmy : குறுங்கடப்பாறை : நெம்பு கோலாகப் பயன்படும் கடை வளைந்த குறுகிய இரும்புக் கடப்பாறை

job shop : பணிப்பட்டறை : தரமான உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அல்லாமல் அவ்வப்போது தனித்தனிப் பணிகளைச் செய்து கொடுக்கும் பணிப்பட்டறை

job ticket : (அச்சு.) பணிக்குறிப்புகள் : அச்சுப் பணி தொடர்பான திட்டவட்டமான அறிவுறுத்தங்கள், இது தனிப்படிவத்தில் குறியீடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்

job type : (அச்சு.) சிறுபணி அச்செழுத்து : சிறுசிறு அச்சுப் பணிகளுக்கெனப் பயன்படும் அச்செழுத்துகள்

Job work : (அச்சு.) சிறுபணி : இடையிடையே செய்து கொடுக் கப்படும் பல்வேறு சில்லறை அச்சுப்பணி

joggle : (க.க.) அண்டைப் பொருத்து : (1) அண்டையிலுள்ள இரு கட்டுமானப் பகுதிகளைப் பிணைக்கும் இணைப்பு

(2) முட்டுப் பொருத்துக்கான ஒரு பக்கக் குடைவு

(3) இணைப் பொருத்துக்கான இடைத் துணுக்கு

joiner : சிறு தச்சர் : பட்டறைகளில் சிறுசிறு தச்சுவேலைகளை - குறிப்பாக இணைப்பு வேலைகளைச் செய்பவர்

joinery : சிறு தச்சு வேலை : வீட்டுத் தட்டுமுட்டுச் செப்பம் செய்யும் சிறுதிறத் தச்சுத்தொழில்

Joint : (பட்) பொருத்துதல் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்களை தச்சு வினைஞர் தமக்குத் தெரிந்த முறைகளில் ஒன்றின் மூலம் பொருத்தி இணைத்தல்

jointer : (க.க ) கொல்லறு : சாந்து கலப்பதற்குக் கொத்தனார்கள் பயன்படுத்தும் தட்டையான எஃகுக் கருவி

கொல்லறு

(2) இழைப்புளி : தச்சுவினைஞர்கள் மரத்தை இழைப்பதற்குப் பயன்படுத்தும் இழைப்புளி

jointer plane : இணைப்பு இழைப்புளி : எல்லா வகையான இழைப்பு வேலைகளையும் செய்வதற்குப் பயன்படும் மரக்கருவிகள் பொருத்தப்பட்ட இழைப்புளி

இணைப்பு இழைப்புளி

jointing : பொருத்திணைப்பு : பொருத்துகளை இடையிடையே சாந்திட்டுப் பூசி இணைத்தல்

joint runner : (கம்.) பொருத்துப்பொதிவு : மணியின் ஈயப் பொருத்துகளில் ஈயத்தை இருத்தி வைத்துக் கொள்வதற்கென்ப் பயன்படுத்தப்படும் தீப்பற்றாத தன்மையுடைய பொதிவு

joint stool : (அ.க.) மனை : தச்சரால் பொருத்தப்பட்ட பாகங்களாலான மனை

joint universal : (பட்.) பொதுநிலை மூட்டு : எந்தத் திசையிலும்