பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
381
K

kaolin : பீங்கான் களிமன் : பீங்கான் செய்வதற்கேற்ற மென்மையான களிமண்.இதனைச் "சீனாக் களிமண்" என்றும் கூறுவர். சிலிக்கா, அலுமினா ஆகிய பொருள்களை நீருடன் கலந்து வேதியியல் வினை புரியச் செய்வதன் மூலம் இது கிடைக்கிறது. பீங்கான் கலங்கள், ஓடுகள் முதலியன செய்யப் பயன்படுகிறது

kapok : இலவம் பஞ்சு : மிகச் சிறந்த மென்மையான பஞ்சு மெத்தைகள், தலையணைகள் தயாரிக்கப் பெருமளவில் பயன்படுகிறது

karat : பொன் மாற்று அளவு : தங்கத்தின் தூய்மையினைக் குறித்துரைப்பதற்கான மாற்று அலகு. தூய்மையான தங்கம் 24 மாற்று உடையது. உலோகக் கலவையாக 14 மாற்று (14/24), 10 மாற்று (10/24) என்ற அளவுகளிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது

katabolism : (உட.) ஊன்மச் சிதைவு : உடலிலுள்ள சிக்கலான உயிர்ச்சத்துப் எtயாற்றல் உண்டாதல்

katathermo meter : குளிர்ச்சி அளவு மானி : காற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி

kauri gum : நறுமணப் பிசின் : நியூசிலாந்தின் பெருமளவிலுள்ள ஒரு வகை ஊசியிலை மரத்திலிருந்து கிடைக்கும் நறுமணப் பிசின், வண்ணச் சாயங்கள் தயாரிப்பதற்குப் பெருமளவில் பயன்படுகிறது

keep down : (அச்சு.) சிறிய எழுத்துருவாக்கம் : அச்சுப்பணியில் ஆங்கில எழுத்து வடிவின் சிறிய பொது முறை உருவ அச்சு எழுத்துக்களை இயன்ற அளவு மிகுதியாகப் பயன்படுத்துதல்

keeper : (மின்.) காந்த முனைத் தேனிரும்பு : குதிரை இலாட நிரந்தரக் காந்தம். காந்த ஆற்றலை இழந்து விடாமல் தடுப்பதற்காக இரு துருவங்களின் குறுக்கே வைக்கப்படும் தேனிரும்புச் சலாகை

keep in : (மின்.) செறிவு எழுத்துருவாக்கம் : அச்சுப்பணியில் அச்சு எழுத்துக்களை இடைவெளியின்றி நெருக்கியடுக்குதல் அல்லது குறுக்குதல்

keeps test for hardness of metals : உலோகக் கடினத்தன்மைச் சோதனை : உலோகங்களின் கடினத் தன்மையைச் சோதிப்பதற்கான ஒரு வகைச் சோதனை. சோதனை செய்யப்பட வேண்டிய உலோகத் துண்டினைத் துளைப்பதற்கு ஓர் எஃகுத் துரப்பணம் எத்தனை முறை சுழல்கிறது என்பதைக் கொண்டு கடினத்தன்மை அளவிடப்படுகிறது

keep up : (அச்சு.) முதன்மை எழுத்துருவாக்கம் : அச்சுப்பணியில் ஆங்கில எழுத்து வடிவின் பெரிய சிறப்பு முறையான முதன்மை உருவ எழுத்துகளை மிகுதியாகப் பயன்படுத்துதல்

kelvin : கெல்வின் : வெப்பத்தின் மூலம் ஒளியை அளவிடுவதற்கான ஒருமுறை. வண்ண ஒளிப்படத்திற்கான ஒளியின் அளவு 32௦௦