பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

கெல்வின் இருக்க வேண்டும். தொலைக்காட்சிப் படப்பிடிப்பு நிலையங்களில் பொதுவாக ஒளியின் அளவு 3200கெல்வினுக்கு அதிகமாக இருக்கும்

kemp : (நூற்.) முரட்டுக் கம்பளி : சாயம் எளிதில் பிடிக்காத முரட்டுக் கம்பளி மயிர்

kennedy key : (எந்.) கென்னடி இருசாணி : இரண்டு சதுர வடிவ இருசாணிகள். அவற்றின் மூல விட்ட முனைகள் துளையின் பரிதியில் குறுக்கே வெட்டும் வகையில் அமைக்கப்படுதல். மிகக் கனமாக வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது

kepler's laws : (இயற்.) கெப்ளர் விதிகள் : கோளங்களின் இயக்கம் தொடர்பான மூன்று கணித விதிகள்: (1) ஒரு கோளம், சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் இயங்குகிறது; (2) கோளத்திலிருந்து சூரியனுக்குள்ள கோடு, சமகாலத்தில் சமபரப்பளவினை உண்டாக்குகிறது. எடுத்துக்காட்டு: கோளம், 'A'-லிருந்து B-க்கும், B-லிருந்து C-க்கும், C-லிருந்து D-க்கும் சமகாலத்தில் செல்கிறது என்றால், SAB, SBC, SCD சமமானவை. (3) ஒரு சுற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம், சூரியனிலிருந்து சராசரி தூரத்திற்கு வீத அளவில் இருக்கும்

kerf : இரம்பப் பிளவு : இரம்பத்தினால் அறுப்பதால் ஏற்படும் பிளவு

kerfing : இரம்ப வரிப்பள்ளம் : ஒரு பலகையின் குறுக்கே. அதனை எளிதாக வளைப்பதற்காக இரம்பத்தினால் அறுத்து வரிப்பள்ளங்கள் உண்டாக்குதல். இந்த வரிப்பள்ளங்கள் பலகையின் கனத்தில் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஏற்படுத்தப்படுகின்றன

kerite : கெரைட் : தார் (கீல்) அல்லது புகைக்கீல், விலங்கு அல்லது தாவர எண்ணெய் கலந்து, மின் பாயாமல் காப்பிடுவதற்குக் கந்தகம் தலந்து வலுவூட்டிய ஒரு கலவைப் பொருள். இது ரப்பருக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது

kerosene : (வேதி.) மண்ணெண்ணெய் : (1) எரிக்கவும், விளக்கேற்றவும் பயன்படும் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் (2) கச்சாப் பெட்ரோலியத்திலிருந்து வடித்திறக்கப்பட்ட வடி நீர்மம். வீத எடைமானம். .7850; வெப்ப நிலை 110°F-க்கு மேல்; எரிநிலை 125°F-க்கு மேல்

key : (எந்.) ஆப்பு இருசாணி : ஆப்புவடிவ இரும்பு அல்லது எஃகு வார்ப்பட்டை. சக்கரங்கள் அவற்றின் அச்சாணிகளில் கழன்று விழுந்துவிடாமல் தடுக்க உதவுகிறது. இது பல வகைகளிலும் வடிவளவுகளிலும் உள்ளது

keyboard : (அச்சு.) விரற்கட்டைப் பட்டை : அச்சு வார்ப்புருவை ஒருங்கிணைப்பதற்கு இடமளிக்கும் ஓர் இயக்க முறையினைக் கட்டுப்படுத்துகிற விரற்கட்டைப் பட்டை அமைப்பு. இதுபோன்ற அமைப்பு வரிவாரி உருக்கச்சுப் பொறியிலும், எழுத்துவாரி உருக்கச்சுப் பொறியிலும் உள்ளன

key. center : (பட்.) மையத் திருப்பாணி : கூம்புவடிவில் உள்ள தட்டையான எஃகுத் துண்டு. துரப் பணக் கதிரிலிருந்து கூம்பு தண்டுத் துரப்பணங்களை அகற்றுவதற்குப் பயன்படுகிறது

key drawing : (அச்சு.) வழிகாட்டு வரைபடம் : செதுக்கு வேலைப்பாடு செய்பவருக்கு அறிவுறுத்தங்கள் அடங்கிய ஒரு வரைதாள்