பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
387

kraft pulp : மரக் கூழ் : தேவதாரு, ஊசியிலை மரங்களிலிருந்து சல்ஃபேட் முறை மூலமாகத் தயாரிக்கப்படும் திண்ணிய மரக் கூழ்

kyanize : மரக் காப்புப் பூச்சு : மரங்கள் உளுத்து அல்லது மக்கிப் போகாமல் தடுக்கும் வகையில் பாதரசக் குளோரைடுக் கரைசலை பூசுதல்

kyans process : (மர.) கியான்ஸ் முறை : பாதரசப் பைகுளோரைடு மூலம் வெட்டு மரங்கள் உளுத்துப் போகாமல் பாதுகாக்கும் முறை

kymograph : (வானூ.) ஒலியழுத்த அளவி : ஒலி அலைகளின் அழுத்த வேறுபாடுகளைப் பதிவு செய்யும் கருவி