பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

L

L-head engine: (தானி.எந்.) 'எல்' வடிவத் தலை எஞ்சின்: தலைப் பகுதி ஆங்கில எழுத்து 'L' வடிவில் அமைந்துள்ள ஓர் எஞ்சின்

lable : (க.க.) வடிதாரை: ஒரு சுவரிலுள்ள இடைவெளிக்கு மேலாக நீட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் கட்டமைவு

table paper: குறிப்புச் சீட்டுத் தாள்: அடையாளத் துண்டுக் குறிப்புச் சீட்டுகள் தயாரிப்பதற்குப் போதிய வடிவளவில் வெட்டப்பட்ட தாள்

laboratory: ஆய்வுக்கூடம்: அறிவியல் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், பகுப்பாய்வு களைச் செய்வதற்கான செய்முறைச்சாலை

laboratory assistant: ஆய்வுகூட உதவியாளர்: ஆய்வுக்கூடத்தில் பொருள்களை வழக்கமான் முறையில் சோதனை செய்யும் ஓர் இளநிலைப் பொறியாளர்

labour saving:(அச்சு.) உழைப்புச்சுருக்கப் பொருள்: உழைப்பினைச் சுருக்கி, கால விரயத்தைக் குறைக்கும் அச்சுப் பொருள்

labyrinth: (உட.) உட்காதுத்துளை: உட்காதிலுள்ள திருக்கு மறுக்கான துளை. அரை வட்ட வடிவமான மூன்று குழாய்கள், திரும்புதல், நிலையிலிருத்தல் உணர்வுகளைக் கொடுக்கின்றன. காதின் சுருள்வளையின் மையக் குழாய், ஒலி அலைகளை கேட்கும் நரம்புத் தூண்டுதல்களாக மாற்றும் உறுப்பினைக் கொண்டிருக்கிறது

lac (மர.வே.) அரக்கு: அரக்குப் பூச்சியிலிருந்து சுரக்கும் பிசின் போன்ற ஒரு பொருள். இது அவலரக்கிலிருந்து வேறுபட்டது. அவலரக்கு என்பது அரக்கிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். விரைவாக உலரும் மரவண்ணப் பூச்சுப் பொருள்களையும் இது குறிக்கும்

lace wood: பட்டுக் கருவாலி: ஆஸ்திரேலியாவில் வளரும் ஒரு வகை மரம். இது விலை மலிவானது; பட்டுப்போல் சீரான புள்ளிகள் உடையது. அலங்கார வேலைகளுக்கு ஏற்றது. சிறிய பரப்புகளிலும், உள்பதிவு வேலைகளிலும் பயன்படுகிறது

lacing: (பொறி.) இறுக்கு இழை வார்: எந்திர உறுப்புகளை இணைத்தியக்கும் தோல் பட்டை வாரின் முனைகளை இழைக்கச்சினால் இறுக்கிப்பிணைக்கும் தோல் வார். இப்போது இதற்கு உலோக இணைப்பிகள் பயன்படுகின்றன

lacquer: (உலோ.) உலோக மெருகு: வாயுமண்டலப் பாதிப்பினால் வண்ணங் கெடாமல் பாதுகாப்பதற்கு உலோக வேலைப்பாடுகளில் பூசப்படும் மெருகெண்ணெய்

lacquer film: (வரை.) சாய மென்தாள்: பட்டுத் திரை வேலைப்பாடுகளுக்கான படியெடுப்பு உள்வெட்டுத் தகடுகள் செய்வதற்குப் பயன்ப்படுத்தப்படும் அரக்குச் சாயம் பூசிய மென்தாள்

lacquer work: மெருகு வேலை: வண்ணங்கெடாமல் தடுப்பதற்கு