பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
389

உலோக மெருகெண்ணெய் பூசப்பட்ட அலங்கார வேலைப்பாடு

lactose: (வேதி.) பால் வெல்லம்: C12H22011) பாலிலுள்ள சாக்கரை. உறைபால் தெளிவினைச் செறிவாக்குதல், படிகமாக்குதல் மூலம் பெறப்படும் இனிப்பான, மிக நுண்ணிய வெண் பொடி

lacunar : (க.க.) பொட்டிப்பு முகடு : பொட்டிப்புகள் அல்லது உள் கண்ணறைகள் உடைய மேல் முகடு

ladder (க.க) ஏணி : ஏறுவதற்கு உதவும் சாதனம். இணையான இரு கோல்களை குறுக்குப் படிகளால் இணைத்து அமைக்கப்பட்ட படிமரம்

ladder back : ஏணி நாற்காலி: பல கிடைமட்ட மரச் சட்டங்கள் கொண்ட நாற்காலிச் சாய்பலகை

ladle : (வார்.) சட்டுவம்: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து உருகிய உலோகத்தைக் காதி வார்ப்படத்தில் ஊற்றுவதற்குப் பயன்படும் கொள்கலம். இது, 25-100டன் வரைக் கொள்ளக் கூடியதாகப் பல்வேறு வடிவளவுகளில் உண்டு

la Farge cement : சுண்ணச் சிமென்ட் : சுண்ணாம்பை நீற்றும் போது துணைப் பொருளாக உண்டாகும் சிமென்ட். இது கறைபடாதது. இது போர்ட்லந்து சிமென்ட் போன்றவலுவுடையது

lagging angle : (மின்,) பின்னடைவு கோணம் : ஒரு தூண்டு மின்சுற்று வழியில் மின்னழுத்தத்தைப் பின்னடையச் செய்கிற மின்னோட்டத்தின் கோணம்

lagging current : (மின்) பின்னடைவு மின்னோட்டம் : ஒரு மின் சுற்று வழியிலுள்ள தூண்டலினால் மின்னோட்டம் பின்னடையும்படி செய்கிறது

lag screw : பின்னடைவுத் திருகு : சதுர வடிவத் தலையுடைய, கனமான தரத் திருகு. இதன் தலையில் இயைவுப்பள்ளும் இல்லாததால் இதனைத் திருக்குக் குறடு மூலம் இறுக்க வேண்டும்

laid paper : முகட்டுக் காகிதம் : கம்பிகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்டதால் வரிவரியான முகடுகளுள்ள காகிதம்

lake : (வேதி) அரக்குச் சாயம் : அரக்கினால் செய்யப்பட்ட வண்ணப் பொருள்.

lake copper : (உலோ,) எரிச்செம்பு : மிச்சிகன் ஏரி அருகே கிடைக்கும் தாதுப்பொருள் களிலிருந்து குளிர் செறிவாக்க முறைகள் மூலம் பெறப்படும் செம்பு

lambre quin : முகட்டுத் திரை: கதவின் அல்லது பலகணியின் அலங்கார முகட்டுத் திரை

laminar flow : (வானூ,) தடைபடாத் துகளியக்கம் : தடைபடாத துகள்னுக்களின் இயக்கம், திட எல்லைகள் அருகே பசைத் திரவம் பாய்வதை இது குறிக்கும்

laminate : தகட்டடுக்கு : மரப் பலகைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஒட்டுப் பலகை தயாரித்தல், மென்தாள் ஒட்டல்

laminated brush : (மின்) மென் தகட்டுத் தொடுவி செம்பு: வெண்கலம் போன்ற உலோகங்களின் மென்தகடுகளாலான திசை மாற்றுத் தொடுவி

laminated construction : அடுக்குக் கட்டுமானம் : குறைந்த எடையில் உயர்ந்த அளவு வலிமை பெறு