பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

வதற்காக அடுக்குகள் அடுக்கி எழுப்பப்படும் கட்டுமானம்

laminated core : (மின்) மென் தகட்டு உள்ளீடு : மின் காப்பிடப்பட்ட இரும்புத்தகடு களின் அடுக்குகளினாலான ஒரு மின்னக உள்ளீடு. இது உலோகத்தில் சுழல் மின்னோட்டம் ஏற்படாமல் தடுக்கிறது

laminated liner: (தானி) அடுக்குக் காப்புறை : உந்து ஊர்திகளில் சுழற்றக்கூடிய பல அடுக்கு உள்வரி உலோகக் காப்புறை

laminated plastics : (குழை) அடுக்கு பிளாஸ்டிக்: கனமில்லாமல் வலுவாகவுள்ள பிளாஸ்டிக். கண்ணாடிப் பொருள்களை அடுக்கடுக்காக அமைத்துச் செறிவாக்குவதன் மூலம் போதிய வலிமையுள்ள பிளாஸ்டிக் கிடைக்கிறது. இவை தகடுகளாக அல்லது படகின் உடற்பகுதிக்கேற்ப வலுவாகத் தயாரிக்கப் படுகின்றன

lamp : (மின்.) விளக்கு : மின் இழை அல்லது சுடர் உள்ள ஒரு சாதனம். இது சூடாகும் போது சுடர்விட்டு ஒளியுண்டாக்குகிறது

lamp adapter : (மின்) விளக்குக் கிளைப்பான் : தொலைபேசித் தொடர்பாளரின் கவனத்தைக் கவர்வதற்காக தொலைபேசி,விசைப் பலகைகளில் பயன்படுத்தப்படும் வெண்சுடர் விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு சாதனம்

lamp annunciator : (மின்) தொலைபேசிச் சுடர் விளக்கு : தொலைபேசி இயக்குநரின் கவனத்தை ஈர்ப்பதற்காகத் தொலைபேசி விசைப் பவகைகளில் பயன்படுத்தப்படும் வெண்சுடர் விளக்குகளின் தொகுதி

lamp bank : (,மின்) விளக்குப் பலகை : விலக்குகளுக்கான பல கொள்கலன்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரு பலகை. இந்த விளக்கு கள் கட்டுறுத்தும் கம்பங்களுடன் இணைக்கப் பட்டிருக்கும்

lamp base: (,மின்) விளக்காதாரம் : ஒரு வெண்சுடர் விளக்கின் முனையுடன் இணைக்கப்பட் டுள்ள பித்தளைத் திருகு ஆதாரம், இது ஒரு குதை குழியுடன் விளக்கினை இணைப்பதற்கு இடமளிக்கும்

lampblack : புகைக்கரி வண்ணம்: புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப் பொருள். இது இயற்கை வாயுவிலிருந்து அல்லது எண்ணெயிலிருந்து கிடைக்கிறது

lamp cord (மின்) விளக்குக் கட்டிழை : இரு சரங்களாக மின் காப்பிட்ட மின் கடத்திகளைக் கொண்ட நெகிழ்வுடைய கட்டிழை. இது பொதுவாக ஒரே உறையில் இருக்கும்

:lamp efficiency (மின்) ஒளித்திறன் :' ஒரு மெழுகுவர்த்தியின் ஒளித்திறனை உண்டாக்குவதற் குத் தேவைப்படும் ஆற்றலின் அளவு. இது வாட்டுகளில் குறிப்பிடப்படும். இதனை வாட்| மெழுகுவர்த்தித் திறன் (W.P.C.) என்று குறிப்பிடுவர்

lamp socket : (மின்) விளக்குக் குதைகுழி: விளக்குக்கும் மின்சுற்று வழிக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு விளக்கின் அடிப்பகுதியைப் பொருத்துவதற்குரிய கொள்கலன்

'land: (பட்.) சால்வரி இடைவெளி: துரப்பணங்கள். குழாய்கள், துளைச் சீர்மிகள் போன்ற கருவிகளில் வடுப்புள்ளங்களுக் கிடையிலுள்ள இடைவெளி

:landing : (வானூ.) தரையிறங்குதல் :'பறக்கும் விமானம் பறக்கும் வேகத்தைக் குறைத்துக் கீழே