பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
391

இறங்கு தரையுடன் தொடர்பு கொண்டு இறுதியாக நின்று விடுதல்

landing angle: (வானூ) தரை நிலைக் கோணம்: விமானம் தரை மட்டத்தில் அதன் இயல்பான நிலையில் நிலையாக இருக்கும் போது அதன் உந்து கோட்டிற கும் கிடைமட்டக் கோட்டிற்கு மிடையிலான கூர்ங்கோணம்

landing area floodlight : (வானூ.) தரையிறங்கு பகுதி ஒளிப் பெருக்கு: விமானம் தரையிறங்கும் பகுதியில் பல திசைகளிலிருந்து ஒளி வீசுவதற்கான சாதனம்

landing beam: (வானூ) அலைக் கதிர்க்கற்றை : விமானம் தரை றங்குவதற்கு வழிகாட்டும் வானொலி அலைக்கதிர்க்கற்றை

landing direction light : (வானூ.) இறங்குதிசை விளக்கு : விமானம் எந்தத் திசையில் தரையிறங்க வேண்டும் என்பதைக் காட்டும் விளக்கு அல்லது விளக்குகளின் தொகுதி

landing field : (வானூ) தரையிறங்கு தளம் : விமானம் தரையிறங்குவதற்கு ஏற்ற வடிவளவும் பரப்பளவும் கொண்ட ஒரு தளம். இது விமான நிலையத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம்

landing flap: (வானூ) தரையிறங்கு சிறகு : விமானத்தின் ஓர் இறகின் பின் முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஓர் இணைப்பு தரையிறங்கும் போது இதைத் திருப்பும்போது இது காற்றுத்தடையாகச் செயற்படுகிறது

landing gear : (வானூ) தரையிறங்கு பல்லிணை: விமானத்தின் அடியிலுள்ள ஒரு கட்டுமானம் தரையிறங்கும் போது ஏற்படும் அதிர்ச்சியைக் குறைக்கவும் தரையிலோ, நீரிலோ விமானம் இருக்கும் போது அதனைத் தாங்கிக் கொள்ளவும் இது பயன்படுகிறது

landing light : (வொனூ) தரையிறங்கு ஒளி: விமானம் தரையிறங்கும் போது ஒளியூட்டுவதற்காக விமானத்திலுள்ள ஒரு விளக்கு

landing mat: (வானூ) தரையிறங்கு தளப்பாய்: விமானம் தரையிறங்குவதற்கான ஓடுபாதையாக அமைக்கப்பட்டுள்ள உலோக வலைகள் அல்லது துவாரமுள்ள உலோகத் தகடுகள்

landing newel : (க.க) தரையிறங்கு நடுத்தூண் : ஒரு படிக்கட்டின் தரையிறங்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள, படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக்கம்பம்

landing rocket: (விண்) இறங்கு ராக்கெட்: ஒரு செயற்கைக் கோளிலிருந்து அல்லது ஒரு பெரிய விண்வெளிக்கலத்திலிருந்து ஒரு கோளத் தின் மேற்பரப்பில் பயணிகளையும் சரக்குகளையும் மாற்றுவதற்குரிய மனிதரால் இயக்கப்படும் ஒரு விண்வெளி ஊர்தி

landing Speed:(வானூ) தரையிறங்கு வேகம்: விமான சமதளத்தில் பறந்து கொண்டு, போதிய அளவு கட்டுப்பாட்டில் நிலைத்து நிற்கக்கூடிய குறைந்த அளவு வேகம்

landing strip: (வானூ) தரையிறங்கு நீள் தளம் : விமான நிலையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குறுகலான நீண்ட நிலப்பகுதி. இயல்பான சூழ்நிலைகளில் விமானம் தரையிறங்குவதற்கும்,தரையில் ஓடிப் பறப்பதற்கும் இது பயன்படுகிறது

landing T: (வானூ.) தரையிறங்கு T: ஆங்கிலத்தில் 'T' எழுத்தின்