பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
393

வான எஃகு அலகுடைய ஒரு கருவி. இதன் கைபிடி 18செ.மீ. அல்லது 3 செ.மீ. நீள்முடையதாக இருக்கும். இது கலவை செய்திடப் பயன்படுகிறது

larva: (உயி.) முட்டைப் புழு: ஒரு பூச்சியின் வாழ்க்கையில், முட்டையிலிருந்து வெளிவந்த புழு

laser: (விண்.) லேசர்: கதிரியக்கத்தின் தூண்டிய ஒளிர்வு மூலம் ஒளிப்பெருக்கம் செய்யும் கருவி. ஒரு மூலக்கூற்று அல்லது அணு அமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றலை ஓர் உட்பாட்டுச் சைகை மூலம் தூண்டி ஒளியை உண்டாக்குவதற்கான சாதனம்

last மிதியடிப் படியுரு: புதை மிதியடி செய்வதற்குரிய படியுருவக் கடை

lastic: (வேதி.குழை,) ரப்பர் பிளாஸ்டிக்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ரப்பரின் பண்புகளையுடைய ஒரு பிளாஸ்டிக் பொருள்

latent heat: உட்செறி வெப்பம்: ஒரு பொருளின் வெப்ப நிலையை மாற்றாமல் அப்பொருளின் இயற்பியல் நிலையை மாற்றுகிற வெப்பம், எடுத்துக்காட்டு பனிக்கட்டியை நீராக மாற்றுவதற்குத் தேவை வெப்பும்; 32° ஃபாரன் ஹீட் நீரை நீராவியாக மாற்றுவதற்குத் தேவை யானது 212° ஃபாரன் ஹீட்

lateral : பக்கம் நோக்கிய: பக்கம் நோக்கிச் செல்கிற அல்லது நீள்வாக்கிற்குக் குறுக்காகச் செல்கிற

lateral motion: பக்கம் நோக்கிய இயக்கம்: பக்கம் நோக்கிய திசையில் இயங்குதல்

laterals: (பொறி.) மூலைவிட்டத் தளை இணைப்பு: விறைப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக எந்திரத்தின் இரு உறுப்புகளிடையே மூலை விட்டமாகத் தலைப் பட்டைகளால் இணைத்தல்

lateral stability: (வானூ) பக்க உறுதிப்பாடு: விமானத்தில் சுழற்சி விரிசல், பக்கத் தளர்வு போன்றவற்றால் சமநிலைச் சீர்குலைவு ஏற்படாமல் உறுதிநிலையை ஏற்படுத்துதல்

lateral strain: (பொறி) பக்கவாட்டத் திரிவு: எந்திரக் கட்டமைப்புக்கு எதிராகப் பக்கவாட்டில் ஏற்படும் திரிவு. இதனைத் குறுக்குத் திரிவு என்றும் கூறுவர்

lateral thrust: பக்க உந்து விசை: பக்கங்களை நோக்கி அளாவுகிற ஒரு ப்ளுவின் அழுத்த விசை

latex : ரப்பர் மரப்பால்: காகிதத்தை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ரப்பர் மரப்பால்

lath: (க.க.) வரிச்சல்; சுவர், மச்சு ஆகியவற்றிற்குப் பாவப்படும் 4×1x10செ.மீ.அளவு மென்மரப்பட்டிகை

lathe: கடைசல் எந்திரம்: (எந்.) வட்ட வடிவப் பொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் எந்திரம்

lathe bed: (எந்) கடைசல் எந்திரப் படுகை: கடைசல் பிடிக்கும் எந்திரத்தின் ஏற்புமைவு வாய்ப்புடைய அடிப்பணிச் சட்டம்

lathe center grinder: (எந்) கடைசல் மைய அரைப்பான்: ஒருகடைசல் எந்திரத்துடன் இணைக்கப்படும் ஓர் அரைவைச் சாதனம், இது மையங்களை அராவுவதற்குப் பயன்படுகிறது