பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
395

layout man: (அச்சு) பக்க அமைப்பாளர்: அச்சுப்பணியில் பக்கங்களை அமைப்பாக்கம் செய் பவர். இவரை 'அச்சுப் பக்க அமைப்பாளர்' என்றும் கூறுவர்

layout paper: (அச்சு) பக்க அமைப்புக் காகிதம்: அச்சுப் பக்க வடிவாக்கத்திற்குப் பயன்படும் காகிதம். இதில் அச்சுருப் படிவச் சதுரங்கள் வரையப்பட்டிருக்கும், இதில் விளம்பரங்களும், மற்ற அச்சிட வேண்டிய பணிகளும் வடிவமைக்கப்படும்

lazy tongs : பல் திசை விளைவு நெம்புகோல் : தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியெடுப் பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு

leach : (குழை.) நீர்மக் கசிவு : ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளைக் கசிவூதல் மூலம் உள்மாசு வெளியேற்றுதல்

leaching cesspool : (கம்) கசிவு வடிகுட்டை : நீர் கசியக்கூடிய ஒரு வடிகுட்டை

lead : (மின்.) (1) தலைமை மின்னி ணைப்புக் கம்பி: ஒரு மின் இணைப்புச் செய்யப்பட்டுள்ள மின் சாதனத்திலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு மின் கடத்தி

(2) முந்து நிலை அளவு : ஒரு நிமிர் வீத வளைகோட்டின் நீச முனையும் உச்ச முனையும் மற்றொரு வளைகோட்டின் மீதான அதே முனைக்கு முன்னேறி எட்டுகிற போது, அந்த வளைகோடு மற்ற வளைகோட்டிற்கு முந்து நிலையிலிருப் பதாகக் கூறப்படும்

(3) திருதாணி இடைவெளி : ஒரு திருகாணியில் ஒரு முழுச்சுற்று முடிந்ததும் திருகாணி முன்னேறியிருக்கக் கூடிய தூரம்

lead : ஈயம் : பழுப்பு நீலநிற உலோகம்; மென்மையானது; கம்பியாக இழுத்து நீட்டத்தக்கது. தகடாக்கத்தக்கது. வீத எடைமானம் 11 34; உருகுநிலை 327°C நைட்ரிக் அமிலத்தில் கரையக் கூடியது. பொதுவாக, கந்தகத்துடன் கலந்து ஈயச்சல்பைடு ஓர் காலினா என்ற தாதுவாகக் கிடைக்கிறது. தூய்மையர்கவும், கூட்டுப்பொருளாகவும் பல்வேறு வகையில் பயன்படுகிறது

lead bath : (உலோ) ஈயக் குழம்பு : எஃகுத் துண்டுகளை 650°F முதல் 1700°F வரைச் சூடாக்குவதற்கான உருகிய ஈயக் குழம்பு

lead burning: (தானி) ஈயப்பற்ற வைப்பு : ஈயத்தைப் பயன்படுத்திப் பற்றவைத்தல் சேமக்கலங்களில் முக்கியமாகப் பயன்படுகிறது

lead cutter: (அச்சு) ஈய வெட்டுச் சாதனம் : ஈயத்தை வேண்டிய வடிவளவுகளில் வெட்டுவதற்குக் கையினால் இயக்கப்படும் ஒரு கருவி

leaded matter ; (அச்சு) ஈய இடைவெளி :- அச்சுப்பணியில் வரிகளுக்கிடையே ஈய இடைவரிக் கட்டைகள் இடப்பட்டு அமைக்கப்பட்ட அச்செழுத்துகள்

leaded zinc oxide : (வண்) ஈய நாகஆக்சைடு : ஈயச் சல்பேட்டையும் துத்தநாக ஆக்சைடையும் இணைத்துத் தயாரிக்கப்பட்ட வெண்ணிறச் சாயப் பொருள்

leader : (தொ. கா.) இணைப்புத் திரைப்படச் சுருள் : திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவியில் இணைத்துத் தொடர்புபடுத்துவதற்குத் திரைப்படச் சுருளின் இரு முனையிலும் பயன்படுத்தப்படும் வெற்றுத் திரைப்படச் சுருள்

leaders : (அச்சு.) வழி காட்டு வரை: விழிக்கு வழிகாட்டும்