பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அமைக்கப்பட்டுள்ள கட்டுப் பாட்டு அமைவு. இது பெருமளவு பாரத்தைப் போதிய அளவு முறுத்கத்துடன் நகர்த்துவதற்குப் பயன்படுகிறது

amplification factor : மிகைப்புக் கரணி : ஒரு மின்னழுத்தத்தை அதிகமாக்குகிற ஒரு வெற்றிடக் குழலின் தன்மை

amplifier : (மின்.) மிகைப்பி : வலுக்குறைந்த ஒலி அல்லது மின்னோட்டத்தின் ஆற்றலை அதிகப்படுத்தும் கருவி

amplitude : (கணி.) வீச்சு : (1) சில கணிதச் சமன்பாடுகளின் மதிப்பினை மாற்றக்கூடிய ஒரு கோணம். (2) (இயற்பியல்) ஒரு துகள் ஒரு முழு அதிர்வை முடிப்பதற்குச் செல்லும் தூரத்தின் அளவு

amplitude modulation : (மின்.) வீச்சின் ஏற்ற இறக்கம் : மின்விசைச் செலுத்தியில் மின்தாக்குதலின் ஆற்றலை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்தல்

ampoule : மருந்துச்சிமிழ் : தோலினுள் செலுத்தப்படும் ஊசி மருந்தினையுடைய சிறிய கண்ணாடிக் குப்பி


anacoustic zone : (விண்) ஒலியிலாமண்டலம் : 162 கி.மீ. உயரத்திற்கு மேலே விண்வெளியில் ஒலியில்லாமல் இருக்கும் அமைதி மண்டலம்

anaemia : குருதிச்சோகை : இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுவதால் உண்டாகும் இரத்தசோகை நோய். இந்த நோய் கண்டவர்கள் வெளிறிய தோற்றமுடன் நலிந்தும், சோர்ந்தும், தளர்ந்தும் காணப்படுவார்கள்

anaesthesia : உணர்ச்சியின்மை : உடலில் அறுவைச் சிகிச்சை செய்யும்போது உணர்ச்சி மயக்கமூட்டுதல் அல்லது உடலின் ஒரு பகுதியில் வலியை உணராதவாறு உணர்விழக்கச் செய்தல். மயக்கமடைவதற்குக் குளோரோஃபார்ம் போன்ற மயக்க மருந்துகளும், உடல் உறுப்பை உண்ர்விழக்கச் செய்ய கோக்கைன் போன்ற உணர்வின்மை ஊட்டும் பொருள்களும் பயன்படுகின்றன

anaesthetics : மயக்க மருந்து : உணர்விழக்கச் செய்திடும் மருந்து. குளோரோஃபார்ம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வு நீக்கி என்பர். எடுத்துக்காட்டாக, ஒரு பல்லைப் பிடுங்க வேண்டுமானால், அந்தப் பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ய இந்த மருந்து கொடுக்கப்படும். பொது மயக்க மருந்து கொடுத்தால், நோயாளி மயக்கமடைந்துவிடுவார்

analogous colours : ஒப்புடை வண்ணங்கள் : ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய வண்ணங்கள். எடுத்துக்காட்டு: சிவப்பு, செம்மஞ்சள் நிறம், மஞ்சள், செம்மை நிறம் முதலியன

analog signal : ஒத்திசைவுச் சைகை : கணக்கிடுவதிலும், கட்டுப்பாடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒருவகைச் சைகை. இந்தச் சைகை காலத்தில் நுண்ணியதாகவும் அது குறித்திடும் மாறியல் மதிப்புருவின் விகிதாசாரத்திலும் அமைந்திருக்கும்

analogy : (மின்.) ஒத்திசைவு : பழகிப் போன நடைமுறையை அல்