பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

யுடைய ஓர் அடிப்படை மின் கலம். இதில் கார்பன் துத்தநாக மின் முனைகளும், நவச்சார மின் பகுப்பானும் மின்காந்த முனைப் பியக்க அகற்றியாக மாங்னிஸ் டையாக்சைடும் பயன்படுத்தப்படுகின்றன

lectern : சாய்மேசை : படிப்பதற்குப் பயன்படும் சாய்வான மேசை

ledge : (க.க.) வரை விளிம்பு : சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு

ledger paper : பேரேட்டுத் தாள் : கணக்குப் பதிவுப் பேரேடுகள் தயாரிப்பதற்கான கனமான தாள்

left hand engine : (வானூ) இடப்பக்க எஞ்சின் : விமானத்தின் முற்செலுத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு இடப்புறமாக இயங்கும் வகையில் உள்ள எஞ்சின்

left hand screw : (எந்) இடப்புறத் திருகு : வடமிருந்து-இடமாகத் திருகும்போது முற்செல்லும் வகையில் அமைந்த திருகாணி

left hand thread : (எந்) இடபுறத் திருகிழை: மரையாணி அல்லது திருகாணியை இறுக்குவதற்கு இடப்புறமாகத் திருகும் வகையில் அமைந்த திருகிழை

legend : நீளம் : பிழம்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவைக் கூறு : ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு உள்ள தூரம், கால நீட்சியையும் குறிக்கும்

length: (அச்சு.) விளக்க வாசகம்: ஒரு படத்திற்கான விளக்க வாசகம்

lens : (பற்) பற்றவைப்புக் கண்ணாடி வில்லை : பற்றறைக்கும் பணியில் மிகுந்த ஒளிவுடைய ஒளிப்பிழம்பினைக் கண்ணுக்கு ஊறு நேரிடாவண்ணம் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் தனிவகைக் கண்ணாடி வில்லை

lenz’s law : (மின்) லென்ஸ் விதி : ஒரு தூண்டு மின்னோட்டத்தின் திசையானது எப்பொழு தும் அதன் காந்தப் புலன் தூண்டு மின்னியக்க விசையினை உருவாக்குகின்ற காந்தப் புலனின் வலிமையில் ஏற்படும் மாறுதலை எதிர்க்கும் என்பது லென்ஸ் விதியாகும்

leopard wood: (தாவர) வேங்கை மரம்: தென் அமெரிக்க மரம். இது கடினமானது; பல வண்ணப் புள்ளிகளுடையது.இது அலங்கார மேலொட்டுப் பலகையாகப் பயன்படுத்தப்படுகிறது

leprosy : (நோயி.) தொழுநோய்: வெப்ப நாடுகளில் தோலிலும் நரம்புகளிலும் உண்டாகும் ஒரு பாக்டீரியா நோய். இதனால் தோலில் வெண்புள்ளிகள் தோன்றும். அந்த இடத்தில் உணர்ச்சி இல்லாமற்போகும்; தசையாற்றலும் குறையும், இறுதியில் நரம்பு இயக்கம் நின்றுபோய் உறுப்பு செயலற்றுவிடும். இன்னொரு வகைத் தொழுநோயினால் தோல் தாறுமாறாக வீங்கும்

letter board : (அச்சு) கடிதத் தாள் படிவம் : கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாளின் தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ள படிவம். அச்சடிக்கப்பட்ட பின்னர் உள்ள தாளையும் குறிக்கும்

letter press : எழுத்து அச்சுப் பொறி: எழுத்துகளைப் படியெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சாதனம்

letter-press printing : (அச்சு) அச்செழுத்தில் அச்சிடல் : அச்செழுத்துகளில் அல்லது புடைப்