பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
399

பெழுத்துகள் உள்ள தகடுகளில் அழுத்த அச்சிடுதல்

letter-size drills :(உலோ.வே) எழுத்து வடிவத் துரப்பணங்கள் : இவை A முதல் Z வரையிலான எழுத்துக்களின் வடிவில் அமைந் திருக்கும். A வடிவம் சுமார் 15/64 விட்டமுடையது. Z வடிவம் சுமார் 13/32" விட்டமுடையது

letter spacing : எழுத்து, இடை வெளியாக்கம் : அச்சுப்பணியில் எழுத்துகளிடையே இடைவெளியை அதிகப்படுத்திச் சொற்களை விரிவுபடுத்துதல்

level : (1) கிடைமட்டம்: கிடை மட்டமான தளத்தில் கிடைமட்ட நிலை

(2) மட்டக் கருவி : கிடைமட்டத்தைப் பார்ப்பதற்கான கருவி

(3) ஒலியாற்றல்: தொலைக்காட்சியில் அனுப்பீடு செய்யப்படும் ஒளியின் ஆற்றல் அளவு. இது டெசிபல் கணக்கில் அளவிடப்படும்

level : தளமட்டம் : சமதள நிலையைக் காட்டும் கிடைமட்டம் கருவி. சாராய மட்டம் கிடைமட்டமாக இருக்கும் போது இதிலுள்ள குமிழ் துல்லியமாக குழலின் மையத்தில் நிற்கும்

leveling instrument (பொறி) தளமட்டக் கருவி : ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக் கோட்டில் இருக்கும்போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள அளவுக் குறியீடுகளுடைய வளைவரை, இக்கருவி ஊசலாடுவதற்கு இடமளிக்கிறது. அப்போது கிடைமட்டத் தளத்தின் கோணங்களை அளவிடலாம்

leveling rod : (எந்) சமதளக் கோள்: இதில் இருவகைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன (1) இலக்குக் கோல்; (2) தானே அளவு காட்டும் கோல் இலக்குக் கோல் அளவுகளைக் கோல் அளவுக்காரர்களே படித்தறிய முடியும். தானே அளவு காட்டும் கோல்களில் அளவுகளைச் சமதள அளவாளர் நேரடியாகப் படித்தறியலாம்

level man : (எல்.) சமதள அளவாளர் : நில அளவையாளரின் சமதள மானியை இயக்குபவர்

lever ; (பொறி.) நெம்புகோல்: ஓர் ஆதாரத்தின் மீது இயங்கும் ஒரு விறைப்பான கோல்

leverage : (எந்.) நெம்புகோலியக்கம் : ஓர் ஆதாரத்தின் மீது இயங்கும் நெம்புகோலின் இயக்கம்

lewis (க.க.) கல் தூக்குப் பொறி: கனமான கற்களைப் பற்றித் தூக்குவதற்கான இரும்புப் பொறியமைப்பு

lewis bolt : (க.க) நங்கூர மரையாணி : கூர்மையான பல்வெட்டும் கூம்பானவாலும் உடைய ஒரு மரையாணி. இது கட்டுமானப் பணிகளில் பயன்படுகிறது

leyden jar : (மின் ) லேடன் மின் கலம் : மிக எளிய வடிவ கலம். இது உட்புறமும் வெளிப்புறமும் ஓரளவு உயரத்திற்கு வெள்ளியத் தகட்டுப் படலமிடப்பட்ட ஒரு கண்ணாடி ஜாடியைக் கொண்டிருக்கும். இதன் மரமூடியின் வழியே ஒரு பித்தளைக்கோல் உட்புறப் படலத்துடன் ஒரு சங்கிலி வழியாகத் தொடர்பு கொள்ளும்