பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
401

படும் நடுத்தர வடிவளவுடைய புதர்ச்செடி. இதன் மரம் மிகக் கடினமானது; கனமானது. இதன் ஒரு கன அடி 20 கி.கி. எடையுள்ளது. தாங்கிகளும், செருகு வகைக் கப்பிகளும் செய்யப் பயன்படுகிறது

lime:(க.க.) சுண்ணாம்பு: சுண்ணாம்புக்கல், சிப்பிகள் போன்றவற்றின் மீது வெப்பம் செயற்படுவதால் கிடைக்கிறது. கட்டிடப் பணிகளில் பலவிதங்களில் பயன்படுகிறது. இதனைக் கால்சியம் ஆக்சைடு (CaO) என்பர்

lime light: சுடரொளி : ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்துருவான சுடரொளி. இதனை கால்சியம் ஒளி என்றும் கூறுவர். இது பிரகாச மான ஒளியைத் தரும். மேடை ஒளியமைப்புகளுக்குப் பயன்படுகிறது

limestone: (க.க) சுண்ணாம்புக்கல்: இதனைக் கால்சியம் கார்பனேட் (CaCO8) என்பர். கட்டுமான வேலைகளுக்குப் பயன்படும் சுண்ணாம்பு தயாரிக்கப் பயன்படுகிறது

limiter : வரம்புறுத்துக் கருவி : தொலைக்காட்சியில் ஒலி அல்லது அதிர்வு அலை வீச்சுத் திரிபினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு மின்னணுவியல் வாயில்

limit gauge : (எந்.பட்) வரம்புறுத்து அளவி : ஒன்றுக்கொன்று மாறுவதை அனுமதிப்பதற் கென சரியான பரிமாணத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மாறுதல் வரம்பு ஒன்று அனுமதிக்கப் படுகிறது.இந்த வரம்புகளுக்கேற்ப அளவிகள் செய்யப்பட்டு வேலைப்பாட்டினைச் சோதனையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன

limits of tolerance: (எந்) தாங்கு திறன் வரம்புகள் : எந்திரங்களில் உறுப்புகளின் துல்லியம் கூடுதல் வடிவளவு குறைந்த வடிவளவு பற்றிய வரம்புகள்

limonite: லைமோனைட் : ஓர் இரும்பு ஹைட்ராக்சைடு. இதனை 'பழுப்பு ஹேமடைட்' அல்லது 'சதுப்பு இரும்பு' என்றும் கூறுவர்

linden : எலுமிச்சை இனமரம் : அழகொப்பனைக்குரிய இருதய வடிவ இலைகளும், சிறு நறுமண இளமஞ்சள் வண்ண மலர்களும் உள்ள மரவகை

line : (மின்.) (1) மின் கம்பி : மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அல்லது துணை மின் நிலையங்களிலிருந்து மின் மாற்றிகளுக்கு அல்ல கட்டிடங்களுக்கு நேரடியாக மின் விசையினைக் கொண்டு செல்லும் மின் கம்பி வழி

(2) வரி : அச்சுக்கலையில் அச்சிட்ட சொற்கள் அல்லது இலக்கம் அடங்கிய வரி

(3) பக்கக் கீற்றுவழி : தொலைக் காட்சியில் பக்கவாட்டில் கீற்றுக் கீற்றாக எழும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று

lineal foot : நேர்கோட்டு அடி: நீளவாக்கிலான அடி அளவு. இது சதுர அடி அளவிலிருந்து வேறுபட்டது

line amplifier : மின்வழி மிகைப்பான் : தொலைபேசியில் மின் அனுப்பீட்டுக் கம்பிக்குச் சைகைகளை வழங்குகிற ஒரு மின் மிகைப்பான்

linear : நீட்டலளவை சார்ந்த : ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட கோடுகள் சார்ந்த

linear molecule: (குழை) நெடிய மூலக்கூறு : மிக நீண்ட வடிவ