பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
403

link : (எந்.) கண்ணி; சங்கிலியின் ஒரு தனிவளையம்

(2) பிணைப்புக் கருவி : எஞ்சின்களில் ஓரதர் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஒரு பொறியமைவு

link fuse : (மின்) பிணைப்புருகி: புறக்காப்புறை எதுவுமில்லாத ஓர் உருகிக் கம்பி அல்லது நாடா

link motion : பிணைப்பு இயக்கம்: ஓர் உந்து ஊர்தியின் ஓரதர்களை இயக்குவதற்கான உறுப்புகளை ஒருங்கிணைத்தல்

linograph : (அச்சு) வரி உருக்கச்சு : வரி உருக்கச்சுப் பொறி போன்றதான உருக்கச்சு எந்திரத்தில் கோத்து வரிப்பாளங்ளை வார்த்தெடுக்கும் அச்சுக்கோப்பு எந்திரம்

linotype : (அச்சு.) வரி உருக்கச்சுப் பொறி: அச்சுகோப்பு இல்லாமலே எழுத்துக் களை வரிப்பாளங்களாக உருக்கி வார்த்து அடிக்கும் அச்சுப் பொறி

linseed oil : ஆளிவிதை எண்ணெய் : வண்ணங்கள் தயாரிப்பதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஆளிவிதையிலிருந்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய்

lintel : (க.க) வாயில் மேற்கட்டை : வாயில், பலகணி ஆகிய வற்றின் கிடைமட்டமேற்கட்டை

linters : குற்றிழைப் பருத்தி: விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குறுகிய இழைப்பருத்தி இது. மெத்தை, திண்டு வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது

lintless cotton : விதை பொதிவிலாப் பருத்தி ': நீண்ட இழைப் பருத்தி; இதில் பிற பருத்திகளில் உள்ளது போன்று விதைகள் பஞ்சில் பொதிந்திருக்காது

lip : (பட்.) வெட்டுமுனை: எந்திரப்பட்டறை வழக்கில் ஒரு கருவியின் வெட்டுமுனை

liquefaction: (இயற்) திரவமாக்குதல்: கெட்டிப்பொருளை அல்லது வாயுப் பொருளை நீர்மமாக்குதல்

lique-faction : (இயற்) திரவமாக்குதல்: கெட்டிப்பொருள் அல்லது வளிப்பொருளை திரவ மாக்குதல்

liquid : (வேதி.) திரவம் : ஒரு பொருளின் திரவநிலை. இதற்குக் குறிப்பிட்ட கொள்ளளவு உண்டு. கொண்டிருக்கும் கலத்தின் வடிவத்தைப் பெற்றிருக்கும்

liquid air : (வேதி) திரவக் காற்று : கடுங்குளிர்ச்சியினால் திரவமாக்கப்பட்ட காற்று. இது குளிர்ப்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

liter : லிட்டர் : திரவங்களை அளப்பதற்கான ஃபிரெஞ்சு முகத்தலளவை. 61.027கன அங்குலம் கொண்டது ஒரு லிட்டர்

litharge : லித்தார்ஜ் : ஆக்சிஜன் ஓரணுவுடைய காரீயம். இதனை காரீய மோனாக்சைடு என்றும் கூறுவர்

lithium: (உலோ.) லித்தியம் (கல்லியம்): ஓர் உலோகத் தனிமம். உலோகங்களில் மிகவும் இலேசானது. இதன் ஒப்பு அடர்த்தி 0.53 மட்டுமே. அலுமினிய உலோகக்கலவைகளின் கெட்டித் தன்மையை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது

litho: (தாள்.) கல்லச்சுக் காகிதம்: கல்லச்சுக் கலையில் பயன்படுத்தப்படும் பல்வேறு காகிதங்களைக் குறிக்கும் பெயர்

lithography: (அச்சு) கல்லச்சுக் கலை : கல் செதுக்கீடு செய்து