பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

கற்பாள அச்சு முறையில் அச்சடிக்கும் முறை

lithophone : (வண்) லித்தோஃபோன்: பேரியம் சல்ஃபேட்டும் துத்தநாக சல்ஃபைடும் கலந்த ஒரு கூட்டுப் பொருள். வெண்ணிற வண்ணப் பொருளான இது சிறந்த பொதிவுப் பண்புகளுடையது. உள்வண்ணப் பூச்சு, சுவர் வண்ணப்பூச்சு போன்றவற்றுக்கு ஏற்றது. ஆனால் புறப்பயன்பாட்டுக்கு ஏற்புடையதன்று. லினோலியம் தயாரிப்பதிலும் ரப்பருக்கு வலி ஆட்டுவதிலும் பயன்படுகிறது

litmus; (வேதி.) லிட்மஸ்: கற்பாசி வகைலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள்

litmus-paper: (தாள்) லிட்மஸ் தாள்: வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள். இதனை அமிலத்தில் நனைத்தால் சிவப்பாக மாறும்; காரத்தில் நனைத்தால் நீலமாகவே இருக்கும்

live: (தொ.கா.) நேரடி ஒளிபரப்பு: தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு மூலமாக அல்லாமல் நிகழ்ச்சிகளை நேரடியாகவே ஒளிபரப்புதல்

live axles : (தானி) இயங்கு இருசுகள் : பாரமும் விசைப்பயன்பாடும் அமைந்துள்ள இருசுகள். இவற்றில் பாதி மிதவை, முக்கால் மிதவை வகைகளும் அடங்கும்

live center : (பட்) இயங்கு மையம் : கடைசல் எந்திரம் அல்லது அது போன்ற எந்திரத்தின் சுழலும் கதிரிலுள்ள மையம். வேலைப்பாடு செய்யப்படும் பொருள் திரியான பாதையில் செல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு இது இன்றியமையாதது

live load: (பொறி ) இயங்கு பாரம்: இயங்குகின்ற அல்லது திரும்பத் திரும்ப வருகிற பாரம். இது அதன் இயைபில் மாறாமல் இருப்தில்லை

live matter : (அச்சு) அச்சு வாசகம் : அச்சிட வேண்டிய வாசகம்

live spindle: (எந்) இயங்கு கதிர்: ஒரு கடைசல் எந்திரத்தின் சுழலும் பகுதியின் உராய்வு தாங்கி உருளையிலுள்ள சுழலும் கதிர். இது வால் பகுதியிலுள்ள நிலையான கதிருக்கு நேர் எதிரானது

live testíng:(விண்) இயக்கச் சோதனை: ஒரு ராக்கெட் எஞ்சினை அல்லது விண்வெளி ஊர்தியை உள்ளபடியாகச் செலுத்திச் சோதனை செய்தல்

live wire : உயிர்க் கம்பி : மின் விசை ஓடிக்கொண்டிருக்கும் கம்பி

load : (மின்.) மின்னோட்ட அளவு: மின்விசை ஆக்கப் பொறியால் குறித்த காலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு

loaded wheel:(மின்) அரவைச் சக்கரம்: அரவை செய்யப்படும் பொருளின் துகளினால் மெருகிடப்பட்ட அல்லது தடங்கலிட்ட சக்கரம்

load factor : (வானூ) சுமைக் காரணி: ஒரு விமானத்தில் ஓர் உறுப்பின் மீதான குறிப்பிட்ட பாரத்திற்கும், நேரிணையான அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதம். இது பொதுவாக,முறிவுறுத்தும் பாரத்திற்கும் அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதமாகக் குறிக்கப்படும்

loading: (தாள்.) காகித மெருகுப் பொருள்: காகிதத்தை வழுவழுப்பாக்குவதற்கு அல்லது ஒளி புகாதபடி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொருள் அல்லது கனிமப் பொருள்

load line: (மின்) பார வரை: அளவு சுமை ஏற்றப்பட்டதைக் காட்டும் கோடு