பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
405

loadstone : காந்தக்கல் : காந்தம்

loam : (வார்.) களிச்சேற்று வண்டல்: வார்ப்பட வேலையில் பயன்படும் மணலும் களிமண்ணும் கலந்த கலவை

loam moulds:(வார்) களிச்சேற்று வண்டல் வார்ப்படம் : செங்கற்களினால் உருவாக்கப்பட்டு களிச்சேற்று வண்டல் கொண்டு மேற்பூச்சு பூசப்பட்ட வடிவங்கள். இந்த வார்ப்படங்கள் பெரும்பாலும் பெரிய வடிவங்களை வார்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன

lobby (க.க.) முகப்பு அறை : ஒரு கட்டிடத்தில் முகப்பிலுள்ள ஒரு பெரிய அறை. உணவகங்களில் உள்ளது போல் இதனை பொதுக்கூடமாகவும், புகுமுகக் கூடமாகவும் பயன்படுத்தலாம்

lobe : தொங்கு தசை: உடலின் ஓர் உறுப்பிலிருந்து தட்டை வட்டாகத் தொங்கும் பகுதி

lobe og ear :புறக் காதுமடல்:

loblolly pine : (மர) சிவப்புத் தேவதாரு : கரணையுடைய, மென்மையான இழை கொண்ட மிகுந்த மென் மரமுள்ள ஒருவகைத் தேவதாரு மரம். அமெரிக்காவின் தென்பகுதியில் சட்டங்களுக்கு மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது

local action : (மின்) உள்ளிட நிகழ்ச்சி : ஓர் அடிப்படை மின் கலத்தில், மின்பகுப்பானின் மேற்பரப்பின் கீழுள்ள நேர்மின் முனையில் (எதிர்ச் சேர்முனை) ஏற்படும் வேதியியல் வினை

local currents : (மின்) உள்ளிட மின்னோட்டங்கள்: இவற்றைச் சுழல் மின்னோட்டங்கள் அல்லது ஃபூர்க்கால்ட் மின்னோட்டங்கள் என்றும் கூறுவர்

local vent: (கம்.) உள்ளிடக் காலதர் : ஓர் அறையிலிருந்து மாசடைந்த காற்றினை வெளியேற்றுவதற்கான ஒரு குழாய் அல்லது கூண்டு

locate; இட அமைவு : ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது இடச்சூழலில் அமைத்தல் இடத்தைக் குறித்திடுதல் அல்லது எல்லைகளைக் குறித்தல்

lock: (மர.) பூட்டு: பூட்டு விசைத் தாழ்

locker (க.க.) நிலைப் பெட்டி : சிறிய அடுக்குப் பெட்டி

lockin :(தொ.கா.) ஒலித்தெளிவு : தொலைகாட்சியில் படம் நிலையாகவும் தெளிவாகவும் தெரிவதற்குரிய நிலை. தொலைக்காட்சியில், ஒளிபரப்புக் கருவியிலிருந்து வரும் ஒரு கணத்தொகை நிகழ்வுத் துடிப்புகளினால் அலைவீச்சுச் சுற்றுவழிகள் கட்டுப்படுத்தப்படும் போது இந்த ஒளித்தெளிவு நிலை ஏற்படுகிறது

locking bolts : (எந்) பூட்டு மரயாணிகள் : எந்திர உறுப்புகளை அவற்றின் நிலைகளில் பொருத்திப் பூட்டுவதற்குரிய மரையாணிகள்

locking stile :(தச்சு) பூட்டு நிலை வரிச்சட்டம்: பூட்டு இணைக்கப்பட்டுள்ள கதவின் பகுதி

lock nut : (எந்: ) பூட்டுச் சுரை யாணிகள் : பிரதானச் சுரையாணி பின்புறம் நழுவி விடாமல் தடுப்புதற்காக மற்றொரு கரையாணயின் அடிப்புறம் திருகி இறுக்கப்படும் ஒரு மெல்லிய மரையாணி

lock pin: (எந்) பூட்டு முளை: எந்திரத்தின் உறுப்புகள் கழன்றுவிடாமலிருப்பதற்காக உறுப்பினுள் செருகப்படும் பிணைப்பூசி அல்லது முளை