பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

லது செய்முறையைத்தெளிவு கருதி ஒப்பிட்டுப் பார்த்தல்

analysis : (வேதி.) பகுப்பாய்வு : (1) ஒரு கூட்டுப் பொருளை அதன் தனித்தனிப் பகுதிகளாக அல்லது தனிமங்களாகப் பிரித்தல் (2) விவர அறிக்கையை அட்டவணைப்படுத்துதல்; ஒரு கணக்கை அதன் முதல் தொகைக்குக் கூறுபடுத்தித் தீர்த்தல்

analytical geometry : (கணி.) பகுப்பாய்வு வடிவ கணிதம் : வடிவ கணித உருவங்களை இயற்கணித முறையில் பகுப்பாய்வு செய்யும் முறை

analyzer : (தானி.) பகுப்பாய்வு கருவி : (1) உந்து ஊர்தியின் மின் சுற்று வழிகள், எஞ்சின், சுடரூட்டும் கருவி போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டு பிடிக்க உதவும் தானியங்கிச் சோதனைக் கருவிகளின் தொகுதி (2) மின்னணுவியல் சாதனங்களுடன் பொருத்தி பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய பல அடிப்படைக் கருவிகளைக் கொண்ட சோதனைக் கருவிகளின் தொகுதி. இது தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது

anatomy: (உட.) உடற் கூறியல் : உடலின் எலும்புகள், தசைகள், நரம்புகள் போன்ற உள்ளுறுப்புகளைப் பகுத்தாராய்தல்

anchor : (க.க.) நங்கூரம் (தொல் பொருளியல்) : (1) நங்கூரத்தின் அல்லது அம்புகளின் இடையே வார்ப்படத்தாலான முட்டை வடிவப் பொருள்களை ஒன்றையடுத்து ஒன்றாகப் பதித்தமைத்த கூர்மையான அணிவகை

(2) நங்கூரம் தாங்கியுடன் இணைந்திருக்கிற வலிமைமிக்க குறுங்கணை அல்லது கொளுவி மாட்டுகிற சாதனம்

(3) ஓர் இரும்புச் சலாகையினை ஓரிடத்தில் பற்றி வைத்துக்கொள்வதற்கான ஒர் உலோக ஆதாரம்

anchor : (மின்.) பற்றுக்கோடு : தரையில் முளையிட்டு அடிக்கப்பட்ட ஒரு கோல் அல்லது மரமுளை. இதில் ஒரு கோபுரத்திற்கான ஆதாரக் கம்பிகள் பிணைக்கப்படும்

anchor bolt : (க.க.) நங்கூர மரையாணி : ஒரு முனை கான்கிரீட்டில் பதிக்கப்பட்டுள்ள ஒரு மரையாணி. இது, மரம், எஃகு உறுப்புகளை கான்கிரீட்டுடன் இணைப்பதற்குப் பயன்படுகிறது

anchorage : நங்கூரத் தளை : கட்டழைப்பு முழுவதற்கும் அதிக உறுதிப்பாட்டினை ஏற்படுத்துவதற்காக, ஒரு கட்டமைப்பின் அடித்தள அங்கங்கள் இணைக்கப்படலாகும் ஒரு நிரந்தரக் கட்டமைபபு

and circuit : (மின்.) மற்றும் மின்சுற்று வழி : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உட்பாடுகளைக் கொண்ட ஒரு மின்சுற்று வழி. இதில் ஒரு வெளிப்பாட்டுச் சைகையினை உண்டுபண்ண உட்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்

andiron : அடுப்பணைக்கோல் அல்லது விறகு தாங்கி : அடுப்பில் விறகுகளை ஏந்திவைப்பதற்குரிய ஒர் உலோகச் சட்டம். சில சமயங்களில் இது 'அடுப்புக் கட்டை' 'விறகு அணைக்கோல்' என்றும் அழைக்கப்படும்

anemometer : காற்று வேகமானி :