பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
411
M

machinable : எந்திர வேலைப்பாடு செய்யத்தக்க : கருவிகளினால் அல்லது எந்திரக் கருவியிலுள்ள வெட்டுக் கருவிகளினால் வேலைப்பாடு செய்யத்தக்க பொருள்

machine : (எந்.) எந்திரம் : விசையாற்றலை உருமாற்றுவதற்கான அல்லது இடமாற்றுவத்ற்கான ஒரு சாதனம்

machine composition : (அச்சு.) எந்திர அச்சுக்கோப்பு : எந்திர முறை மூலம் அச்செழுத்துக்களைக் கோத்தல்

machine drawing: எந்திர முறைப் பட வரைவு : எந்திரத்தின் அல்லது எந்திர உறுப்புகளின் வரைபடங்களை எந்திரத்தின் மூலம் வரைதல், இதில் குறிப்புகளும், பரிமாணங்களும் பட்டறைத் தகவல்களும் குறிக்கப்பட்டிருக்கும்

machine dried : எந்திர உலர்த்து தாள் : எந்திரத்தின் உலர்த்து உருளைகளில் உருட்டி முழுமையாக உலர்த்தப்பட்ட காகிதம்

machine drilling : (எந்.) எந்திரத் துரப்பணம்: விசையினால் இயக்கப்படும் எந்திரத்தின் மூலம் துரப்பண வேலைகள் செய்தல்

machine finish: எந்திர மெருகீடு: எந்திரத்தின் மூலமாகக் காகிதத்தின் மேற்பரப்புக்கு மெருகூட்டுதல்

machine glazed : மெருகேற்றிய தாள் : ஒருபக்கம் நன்கு மெருகேற்றப்பட்ட தாள்

machine language : (தானி.) பொறி மொழி : ஒர் எந்திரத்தை இயக்குவதற்கு அறிவுறுத்தும் குறியீட்டுச் சைகைகள்

machine moulding : (வார்.) எந்திர வார்ப்படம் : வார்ப் புருவங்களைத் தயாரிப்பதற்கான வார்ப்படங்களை தனிவகை எந்திரங்களைப் பயன்படுததி உருவாக்குதல்

machine rating : (மின்.) எந்திர அறுதிப்பாடு : ஒர் எந்திரம் அளவுக்கு மீறிச் சூடாகிவிடாமல் விசையை அனுப்பும் திறன்

machinery : எந்திரத் தொகுதி : எந்திரக் கருவிக் கலன்களின் தொகுதி. ஒர் எந்திரத்தின் செயலுறு உறுப்புகளையும் குறிக்கும்

machinery steel : (எந்.) எந்திர எஃகு : திறந்த உலை முறையில் தயாரித்த எஃகு. இதில் 0.15% முதல் 0.25% கார்பன் கலந்திருக்கும். கடும் பதப்படுத்தக்கூடிய, ஆனால் செம்பதமாக்க முடியாத மென்மையான எஃகு அனைத்தையும் இச்சொல் குறிக்கும்

machine screw : எந்திரத் திருகு : தெளிவான வெட்டுத் திருகிழைகளும் பல்வேறு தலைவடிவங்களும் கொண்ட திருகு வகை. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்தத் திருகு ஒரு மரையுறுணியுடனோ, மரையாணி இன்றியோ அமைந்திருக்கும்

machine too! : (பட்.) வெட்டுக் கருவி : கடைசல் எந்திரம், துரப்பண் எந்திரம், இழைப்புளி, அரைவை எந்திரம் போன்ற வெட்டும் வகையைச் சேர்ந்த கருவிகள்