பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

வழியை, அந்தச் சுற்று வழியின் ஒரு பகுதியை உருக்குவதற்குப் பதிலாக ஒரு மின்காந்தத்தின் மூலம் முறிப்பதற்கான ஒரு சாதனம்

magnetic deflection : காந்த விலக்கம்: காந்தப் புலங்கள் மூலம் மட்டுப்படுத்தப்படும் எலெக்ட்ரான் கற்றையின் இயக்கம்

magnetic density : (மின்.) காந்த அடர்த்தி : பார்க்க:பெருக்கடர்த்தி

magnetic field: (மின்) காந்தப் புலம்: ஒரு காந்தத்தின் அருகிலுள்ள இடப்பகுதி. இதன் வழியே காந்த விசைகள் செயற்படுகின்றன

magnetic flux: (மின்.) காந்தப் பெருக்கடர்த்தி : மின்காந்தம், நிலைக்காந்தம் அல்லது கம்பிச் சுருள் மூலம் உருவாக்கப்படும் காந்தவிசைக் கோடுகள்

magnetic force: (மின்.) காந்த விசை : ஒரு காந்தத்தின் துருவங்கள் கவர்ந்திழுக்கிற அல்லது விலகிச் செல்கிற விசை

magnetic fuel pump : (தானி.) காந்த எரிபொருள் இறைப்பான்: வெற்றிட அமைப்பு முறையின் உதவியின்றி எரிபொருள் வழங்கு வதை முறைப்படுத்தும் மின்விசையால் இயங்கும் எந்திர இறைப்பான்

magnetic hoist: (மின்.) காந்த பாரந்துக்கி: மின்காந்தத்தின் மூலம் பாரத்தைத் தூக்கும் ஒரு பாரந்துாக்கி எந்திரம்

magnetic induction: (மின்.) காந்தத் தூண்டல்: பாய்வுத் திசைக்குச் செங்குத்தாகவுள்ள குறுக்கு வெட்டுப் பரப்பின் ஒர் அலகிலுள்ள காந்தக் கோடுகளின் அல்லது காந்தப் பெருக்கத்தின் எண்ணிக்கை

magnetic line of force: (மின்.) காந்தவிசைக் கோடு: ஒரு திசை காட்டியின் முள்ளுக்கு இணைவாக அமைந்துள்ள காந்தக் கோடு

magnetic materials: (மின்.) காந்தப் பொருட்கள்: காந்தம் ஈர்க்கக் கூடிய இரும்பு, எஃகு, நிக்கல், கோபால்ட் போன்ற பொருட்கள்

magnetic needle: (மின்.) காந்த ஊசி: ஒரு நுண்ணிய எஃகுக் காந்தம். இதனை ஒரு ஆதாரத்தில் வைக்கும்போது, பூமியின் காந்தத் துருவங்களுக்கேற்ப, இயல்பாக வடக்கு-தெற்குத் திசையில் நிற்கும்

வடக்கு நோக்கிய கருவியில் எப்போதும் வடக்கையே காட்டும் காந்த ஊசி

magnetic permeability: (மின்.) காந்தத் தகவு: காந்தத் தாக்குதலுக்கும் இளக்கி அடர்த்திக்கும் உள்ள தகவு. ஒரு பொருளுக்குள் காந்தம் எளிதாக ஊடுருவிச் செல்லக்கூடிய திறனைக் கணக்கிடும் அளவு

magnetic potential: (மின்.) காந்த ஆற்றல்: காந்தப் புலத்தின் எல்லையிலிருந்து ஒரு காந்தத் துருவ அலகினைக் காந்த ஆற்றல் தேவைப்படும் புள்ளிக்கு நகர்த்துவதற்குத் தேவைப்படும் பணியின் அளவு

magnetic saturation: (மின்.) காந்தப்பூரித நிலை: ஒரு காந்தப் பொருளில் காந்தமூட்டும் பொழுது, எந்த நிலையில் காந்த மூட்டும் விசை அதிகரித்தாலும் அதன் இளக்கி அடர்த்தியில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படுவதில்லையோ அந்தநிலை. அந்த நிலையில் காந்தம் ஏறுவது பூரித மடைந்து விட்டது என்று பொருள்