பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

கள், தூண்டு சுருள்கள் முதலியவற்றின் சுருணைகளில் பயன்படுத்தப்படும் கம்பி, இது சிறியது. ஒரே செம்புக் கம்பியினாலானது; பஞ்சு, பட்டு, எனாமல் போன்றவற்றால் மின் காப்பிடப்பட்டது; செறிவூட்டப் பெறாதது

magnitude : (விண்.) ஒளிப்பிறக்கம் : விண்மீன்களின் ஒளிப்பிறக்க நிலை. 390மீட்டர் துரத்திலுள்ள ஒரு மெழுகுவர்த்திப் பிரம்பின் ஒளிர்வு, முதன்மை நிலை ஒளிப்பிறக்கம் எனப்படும்

mahlstick : (விண்.) தாங்கு கோல் :ஒவியம் வரைபவர்கள். இடது கைத்தாங்கலாகப் பயன்படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்

mahogany : (தாவ) சீமை நூக்கு: உலகெங்கும் பெட்டிகள், அறைகலன்கள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான மரம். தெற்கு ஃபுளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள் மெக்சிக்கோ, கொலம்பியா வெனிசூலா, மேல் அமேசான் மண்டலம் ஆகியவற்றில் மிகுதியாக வளர்கிறது. இம்மரம் வெட்டியவுடன் இளஞ்சிவப்பு அல்லது வஞ்சிரம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்; வெயில் படப்படக் கருஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும். அடர்த்தி வேறுபடும். கரணைகள் கவர்ச்சியான உருவங்களில் அமைந்திருக்கும்

mahogany, Philippine: (தாவ.) ஃபிலிப்பைன் நூக்கு : ஃபிலிப்பைன் தீவுகளில் வளரும் சீமை நூக்கு மரவகை

main : (குளி.பத.) தலைப்பெருங் குழாய் : பல்வேறு கிளைக்குழாய்களிலிருந்து நீர் வழங்குவதற்கு அல்லது நீரைச் சேகரிப்பதற்குப் பயன்படும் பெரிய குழாய்

main bearings : (தானி.) முதன்மைத் தாங்கிகள் : உந்து ஊர்தி எஞ்சின்களில் வணரி அச்சுத்தண்டினைத் தாங்கி நிற்கும் தாங்கிகள் முதன்மைத் தாங்கிகள் ஆகும்

mains : (மின்.) மின் வாய்கள் : கிளைமின் சுற்று வழிகளுக்கு மின் விசை வழங்குகிற மின்னியல் கடத்திகள்

main shaft : (எந்.) முதன்மை சுழல் தண்டு : எஞ்சினிலிருந்து அல்லது இயக்கியிலிருந்து நேரடியாக மின்விசையைப் பெற்று மற்ற உறுப்புகளுக்கு விசையை அனுப்புகிற சுழல்தண்டு

main supporting surface : (வானூ) முதன்மை ஆதாரப்பரப்பு : விமானத்தில், இறகுகளின் மேற்பரப்பு. இப்பரப்பு விமானம் இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது

major axis : நெட்டச்சு : ஒரு நீள் வட்டத்தின் நீள் விட்டம்

major diameter: (எந்.) நீள் வட்டம்: இதனைப் 'புற விட்டம்' என்றும் அழைப்பர். ஒரு திருகில் அல்லது சுயாணியில் உள்ள மிகப் பெரிய விட்டம்

make up: (அச்சு.) பக்கத் தயாரிப்பு: அச்சுக்கலையில் அச்சுக் கோத்த எழுத்துக்களைப் பக்கங்களாகத் தயாரித்தல்

make-up rule: (அச்சு.) பக்கத் தயாரிப்பு வரித்தகடு: அச்சுக்கலையில் பக்கங்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் எஃகு வரித் தகடு

malleable: (உலோ.) தகடாக்கத் திறன்: உலோகங்களின் வகையில் அடித்து, நீட்டி, வளைத்து, தகடாக்கத தக்க தன்மை