பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

marl : (மண்.) சுண்ணக்கரிகை உரம் : களிமுண்ணும், சுண்ணக்கரிகையும் கலந்த மண்வள உரச்சத்து

marquetry : (மர.வே.) உள் இழைப்பு வேலை: மரத் தளவாடங்களில் உள் இழைப்பு அலங்கார வேலைப்பாடுகள் செய்தல். அரிதாக தந்தம், எலும்பு, முத்து ஆகியவற்றிலும் இந்த வேலைப்பாடு செய்வதுண்டு

marsh gas or methane: (வேதி.) சதுப்பு வாயு அல்லது மீத்தேன் : (CH4) இலேசான, நெடியற்ற, தீப்பற்றக்கூடிய, ஹைட்ரோ கார்பன் என்னும் வாயு. சதுப்பு நிலங்களிலும், சுரங்கங்களிலும் கரிமப் பொருள்கள் சிதைவுறுவதால் இயற்கையாகக் கிடைக்கிற்து. பல கரிமப் பொருள்களை வாலை வடிப்பதன் மூலமும் பெறப்படுகிறது

marsupials: (உயி.) பைம்மாவினம்: வயிற்றில் பையுடைய கங்காரு போன்ற பாலூட்டி உயிரினம். இவை இந்தப் பையில் தன் குட்டிகளைக் கொண்டு செல்கின்றன

martensite : (உலோ.) மார்ட்டென்சைட் : மிகக் கடினமான எஃகில் முதன்மைக் கட்டமைப்புத் தனிமம்

Martensit alloy steels : (உலோ.) மார்ட்டன்சிட்டிக் உலோகக் கலவை : எஃகு முழுமையாக மார்ட்டன்சைட் கொண்ட ஒரு வகை எஃகு. மார்ட்டன்சைட் என்பது, கார்பனும், ஆல்ஃபாவும் (இரும்புப் படிகங்கள்) அணுவியக்கச் சிதறல் மூலம் உண்டாவது. இந்த வகை எஃகு, மிகக் கடினமானது; ஆயினும், பதப்படுத்திய அல்லது மென்மையான எஃகினைப் போன்று அத்துணை கடினமானதன்று. ஆஸ்டினைட்டை 300°C-வெப்ப நிலையில். மெல்ல மெல்லக் குளிர வைப்பதன் மூலம் இது படிகிறது. புகழ்பெற்ற ஜெர்மன் உலோகவியலறிஞர் பேராசிரியர் ஏ. மார்ட்டன்ஸ் என்பாரின் பெயரில் இது அழைக்கப்படுகிறது

mash seam welding : (பற்ற.) மசிவு மடிப்புப் பற்றவைப்பு : இது ஒரு வகை மடிப்புப் பற்றவைப்பு முறை. இதில் விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று வைத்து நன்கு மசிக்கப்படுவதன் மூலம் பற்றவைக்கப்படுகிறது

mask : முகமுடி : முகத்தை மூடிக் கொள்வதற்கு விசித்திரமான வடிவங்களில் செய்யப்பட்ட பொம்மைத் தலைகள்

masonite : மாசோனைட் : மர இழையிலான மின்காப்பு அட்டையின் வாணிகப் பெயர். இது பல்வேறு வகையான மேற்பரப்பு மாதிரிகளில் தயாரிக்கப்படுகிறது. இது பொட்டிப்புகள் அமைப்பதற்குப் பயன்படுகிறது

masonry : கட்டுமான வேலை : கல், செங்கல் போன்றவற்றால் கட்டிடங்கள் கட்டும் வேலை

mass : பொருண்மை : இயற்பியலில், ஒரு திரளில் செறிந்தடங்கியுள்ள பொருளின் அளவு

அச்சுக் கலையில் ஒரு பக்க அச்செழுத்துச் செறிவுப் பகுதிகள்

mass : (குளி.பத.) பொருண்மை : குறிப்பிட்ட உருவமில்லாத ஒரு பொருளில் அடங்கியுள்ள பொருளின் அளவு

mass production : பேரளவு உற்பத்தி: எந்திரக் கருவிகளைப் பயன்