பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

களை அழுத்தி வெப்பமூட்டி ஒட்டிணைத்து வலுவாக்கிய வார்ப்படம்

mah plates : (வார்.) ஒட்டிணைத் தகடுகள் : தோரணிகள் ஏற்றப் பட்ட உலோக அல்லது மரத் தகடுகள். பெருமளவு எண்ணிக்கையிலான வார்ப்படங்கள் தேவைப்படும்போது உற்பத்தியை அதிகமாக்க இது பயன்படுகிறது

mated position : (தானி.) இணைவுறு நிலை : நழுவப் பல்லிணைகளை முறையாகக் கொளுவியிணைக்கும் போது அவை இணைவுறு நிலையில் இருப்பதாகக் கூறப்படும்

materia medica : (மருந்.) மருந்துப் பொருள் ஆய்வு : மருந்துப் பொருட்கள் எவ்வாறு கிடைக்கின்றன, எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, எவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற என்பது பற்றிய ஆய்வு

material well: (குழை.) பொருள் குழிவிடம்: அழுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வார்ப்புப் பொருளை வைப்பதற்குரிய குழிவான இடம்

mat finish : பாய்முறைச் செப்பம்: பளபளப்பின்றி மங்கலாக இறுதிச் செப்பமிடுதல்

mathematics : கணிதவியல் : வண்ணளவுகளுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கு மிடையிலான தொடர்புகள் பற்றி ஆராயும் அறிவியல்

matrix: (அச்சு.) அச்சு வார்ப்புரு: அச்செழுத்துக்களை வார்த்தெடுக்கும் எந்திரத்திலிருந்து எடுக்கப்படும் எழுத்து வார்ப்புருவின் பகுதி. இந்த அச்சு. வார்ப்புருக்களிலிருந்து அச்சு வார்ப்புருத் தகடுகளைத் தயாரிக்கப்படும் கனத்த அட்டையினையும் இது குறிக்கும்

matt : சரவைப் பரப்பு : கரட்டுத் தளமான சரவை வேலைப்பாடுடைய மேற்பரப்பு

matte : (உலோக.) கலவைச் செம்பு : முழுமையாகச்சுத்திகரித்து எடுக்கப்படாத செம்பு. வேறு பல உலோகங்கள் அடங்கிய கலவையையும் இது குறிக்கும்

matter : (இயற்.) சடப்பொருள் : எடையுள்ள, இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய பருப்பொருள்

maul : சம்மட்டி : கனமான சம்மடடிக்கட்டை

mausoleum : (க.க.) கல்லறை மாடம் : வீறார்ந்த கல்லறை மாடம்

mauve : ஊதாச் சாயம் : ஒள்ளிய மெல் ஊதாநிறச் சாயம்

maxhete : (உலோ.) மாக்செட் : நிக்கல், குரோமியம், டங்ஸ்டன், செம்பு, சிலிக்கன் அடங்கிய கலவை எஃகு. இது அரிமானத்தையும் வெப்பத்தையும் எதிர்க்கக் கூடியது. கொள்கலன் குழாய்கள், உலைகளின் உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது

maximum : (கணி.) பெருமம் : (1) அனைத்திலும் மிகப் பெரிய தான அளவு. (2) ஒரு சார்பலன் மூலம் இயன்ற வரையிலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிட்டத்தக்க ஒரு மதிப்பு

maximum power transfer: (மின்.) பெரும விசை மாற்றம் : மின்சுமையின் தடையானது, மின் ஆதாரத்தின் உள்தடைக்குச் சமமாக இருக்கும் போது பெரும விசைமாற்ற நிலை உண்டாகிறது

maximum range : (வானூ.) பெரும வீச்செல்லை: ஒரு விமானம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அளவான வேகத்தில் அனைத்து