பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

நெம்புகோல்கள், இயக்கு சக்கரங்கள் ஊடச்சுகள் போன்றவற்றின் தொகுதி மூலம் அழுத்தம் செலுத்தப்படுகிறது

mechanical drawing : எந்திர வரைப்படம் : கருவிகளைப் பயன்படுத்தி வரையப்படும் படம். எந்திரங்களின் வடிவமைப்புகள் இவ்வாறு வரைபடமாக வரையப்படுகின்றன

mechanical efficiency : (எந்.) எந்திரத் திறன் : (1) ஓர் எஞ்சினின் எந்திரத்திறன் எனப்து அதன் தடைக் குதிரை விசைக்கும், அதன் குறிப்பிடப்பட்ட குதிரை விசைக்கு மிடையிலான விகிதமாகும்

எந்திரத் திறன் = தடைக் குதிரை விசை/குறிப்பிடப்பட்ட குதிரை விசை

(2) இயற்பியல், உட்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக்கு மிடையிலான விகிதம்

வெளிப்பாடு/உட்பாடு = எந்திரத் திறன்

mechanical engineer : எந்திரப் பொறியாளர் : எந்திரங்களை அல்லது எந்திர சாதனங்களை வடிவமைத்து, உருவாக்கிப் பயன்படுத்துவதில் வல்லுநர்

mechanical engineering : எந்திரப் பொறியியல் : விசையை உற்பத்தி செய்து அனுப்பும் எந்திர சாதனங்களை வடிவமைத்து உருவாக்குதல் தொடர்பான அறிவியல்

mechanical vibrator : (மின்.) எந்திர அதிர்ப்பி: எந்திர முறையில் இயங்கும் ஆக்கும்-அழிக்கும் சாதனம்

mechanic arts : கம்மியர் கலை : கைவினையில் பட்டறையிலும் கருவிகளிலும், எந்திரத்திலும் பயிற்சி பெறுதல்

mechanics : இயக்கவியல் : பொருள்களின் மீது விசையின் விளைவுபற்றி ஆராயும் அறிவியல் பிரிவு

mechanization : (தானி.) எந்திரமாக்குதல் : எந்திரங்களைத் தானியங்கு எந்திரங்களாக மாற்றுதல்

medallion : (க.க) பதக்கம் : (1) பட்டயத் தகடு (2) ஒரு பெரிய பதக்கம்

median : மையநிலை : நடுவூடான நிலை; சராசரி

medium carbon steel : (உலோ.) நடுத்தர கார்பன் எஃகு : 0.30% முதல் 0.70% வரை கார்பன் அடங்கிய எஃகு

medium wave : நடுநிலை ஒலிஅலை : வானொலியில் 100மீட்டருக்கும் 800 மீட்டருக்கும் இடைப்பட்ட நீட்சியுடைய ஒலி அலை

medulla oblongata : (உட.) பின் மூளை : மூளையின் பின் பகுதி. இது, சுவாசம், இதயத் துடிப்பு போன்ற உடலுக்கு இன்றியமையாத பெரும்பாலான நடவடிக்கைகளைக் கட்டுப்பபடுத்துகிறது

meg or mega : (மின்.) பத்து லட்சம் : மின்னியலில் பத்து லட்சம் அளவினைக் குறிக்கும் சொல்

mega volt : (மின்.) நூறு கோடி ஓல்ட் : மின்னியலில் பத்து லட்சம் ஒல்ட் மின்னியக்க விசையைக் குறிக்கும் அலகு

megger : (மின்.) தடையாற்றல் மானி : மின்தடைக் காப்பின் தடையாற்றல் மானி

meg-ohm: மெக்.ஓம் : மின்னியலில் பத்து லட்சம் ஓம்களுக்குச் சமமான மின்தடையைக் குறிக்கும் அலகு