பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
425

melting point : (உலோ. ) உருகுநிலை : உலோகங்கள் திடநிலையிருந்து திரவநிலைக்கு மாறுவதற்குரிய வெப்ப நிலை

melting zone : (வார்.) உருகு மண்டலம்: இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை, அடுப்பில், உலோகம் உருகுவதற்கான ஊதுலைக் குழாய்களுக்கு மேலுள்ள பகுதி

memory circuit: (மின்.) நினைவக மின்சுற்றுவழி: தகவல்களைச் சேமித்து வைப்பதற்கான ஒரு மின் சுற்றுவழி. இந்த மின்சுற்றுவழி தொடுநிலையிலோ விடு நிலையிலோ அமைந்திருக்கும்

Mendel-ism: (உயி.) மெண்டல் கோட்பாடு: ஜி. ஜே. மெண்டல் என்ற தாவரவியலறிஞர் கண்டுபிடித்த மரபுப் பண்புகளை எண் கணிப்பு முறைக்குள்ளாக்கும் கோட்பாடு. இதன்படி, ஒன்று அல்லது பிற மரபுக்காரணிகள் (பட்டாணியின் உயரம் அல்லது குள்ளம்) அல்லது கண்களின் நீல நிறம் அல்லது பழுப்பு நிறம்), பாலின உயிரணுக்களில் தனித் தனியே கொண்டு செல்லப்படுகின்றன; இணைப்பினால் மாறுதலடைவதில்லை. ஒரு குழந்தை, தாய்-தந்தை இருவரிடமிருந்தும் 'A' என்னும் ஒரே மரபுப் பண்பினைப் பெறுகிறது என்றால், அந்தப் பண்பினைப் பொறுத்த வரையில் அக்குழந்தை தூய்மையானது. தந்தையிடமிருந்து 'A' என்ற பண்பினையும், தாயிடமிருந்து 'B' என்ற பண்பினையும் அக்குழந்தை பெற்றிருந்தால், அக்குழந்தை 'AB' என்ற ஒரு கலப்புக் குழந்தை ஆகும்

meniere's disease: (நோ.) மெனியர் நோய்: உட்காதில் உண்டாகும் ஒரு வகை நோய். இதனால், தலைவலி, செவிட்டுத் தன்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகின்றன

meninges: (உட.) மூளைக் கவிகைச் சவ்வு: தண்டு மூளையை மூடியிருக்கும் சவ்வு

meningitis: (உட.) மூளைச் சவ்வு அழற்சி: தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி நோய்

meningocele: (உட.) மூளை புற்று: தண்டு மூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி

mensuration: (கணி.) அளவியல்: நீளம், பரப்பு, கனஅளவு முதலியவற்றை அளப்பதற்கான கணிதப் பிரிவு

menthol: பச்சைக் கற்பூரம்: கடுமையான வாசனையுடைய வெண்ணிறமான, பனிக்கட்டி போன்ற பொருள். இது கற்பூரம் போன்று இருக்கும். இதனைத் தோலில் தேய்த்தால் குளிர்ச்சியுணர்வு உண்டாகும்

mer : (குழை.) மீச்சேர்ம கட்டலகு: மீச்சேர்மத்தின் கட்டுமான அலகு

mercerize : (வேதி.) துணிப் பக்குவமாக்குதல்: நூல், துணி ஆகியவற்றுக்குப் பளப்பளிப்பும் உறுதியும் கொடுப்பதற்காகக் கடுங்கார உப்பிட்டுப் பக்குவப்படுத்துதல்

merchant bar: (உலோ.) வாணிக இரும்புச் சலாகை: விற்பனை செய்வதற்கு ஏற்பக் குறுகலாக வெட்டப்பட்ட இரும்புச் சலாகை

mercury: (வேதி.) பாதரசம்: வெள்ளி போல் வெண்ணிறமான திரவ உலோகும். இதன் எடை மானம் 13.6. இரசக் கந்தகை அல்லது பாதரச சல்ஃபைடு (Hgs) மூலம் கிடைக்கிறது. சிவப்புப் படிக வடிவில் கிடைக்கிறது. இரசக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது

mercury arc rectifier: (மின்.) பாதரசச் சுடர் திருத்தி: மாற்று