பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
427

கோத்துப் பக்கங்களை முடுக்கும் போது இடைவெளிகளை நிரப்புவதற்காகப் பயன்படும் உலோகத் துண்டு. இது அச்செழுத்தின் உயரத்தைவிடக் குறைவாக இருக்கும்

metalizing: (குழைம.) உலோக உறையிடல்: பிளாஸ்டிக்கிற்கு ஒரு மெல்லிய உலோகப் படலத்தின் மூலம் உறையிடுதல்

metal lacquer: உலோக மெருகெண்ணெய் : உலோகத்தினாலான பொருட்களுக்கு மெருகெண்ணெயாகப் பயன்படுத்தப்படும் வெடியகப் பஞ்சின் அமில மற்றும் மெதில் அசிட்டோ கரைசல்கள்

metallic rectifier: (மின்.) உலோகத்திருத்தி: 'எலெக்ட்ரான்கள் தாமிரத்திலிருந்து தாமிர ஆக்சைடுக்குப் பாய்கின்றன; ஆனால், தாமிர ஆக்சைடிலிருந்து தாமிரத்திற்குப் பாய்வதில்லை' என்ற தத்துவத்தின் அடிப்படையில், தாமிர ஆக்சைடினால் செய்யப்பட்ட ஒரு வகைத் திருத்தி. இது, ஒரே திசையில் மின்சாரத்தைக் கடத்தும் மின்கடத்தி

metallography: (உலோ.) உலோக உள்ளமைப்பியல்: உலோகங்களின் நுண்ணிய உள்ளமைப் புகளை ஆராயும் துறை

metallurgy :(உலோ.) உலோகக் கலை: உலோகங்களின் பண்பியல்புகளை ஆராய்ந்தறியும் துறை, உலோகத் தாதுக்களை உருக்கி, சுத்திகரிக்கும் அறிவியல்

metallurgy: உலோகக் கலை: உலோகத் தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் அல்லது உலோகக் கலவைகளை உண்டாக்கும் கலை அல்லது அறிவியல், உலோகங்கள் பற்றி ஆராயும் துறை

matal pattern: (வார்.) உலோகத் தோரணி: நீண்ட நாட்கள் உழைப்பதற்காக மரத் தோரணிகளிலிருந்து உருவாக்கப்படும் வார்ப் படத் தோரணிகள்

metal spinning: (பட். ) உலோகத் திரிப்பு: தகடாக்கக் கூடிய உலோகங்களில் இலேசான உறுப்புகளை வட்டமான வார்ப்பு வடிவங்களாக உருவாக்கும் முறை. கடைசல் எந்திரத்தில் வேகமாகச் சுழலும் போது அழுத்தம் கொடுக்கும்போது இந்தத் திரிப்பு ஏற்படுகிறது

metal spraying: உலோகத் தெளிப்பு: உலோகங்களுக்கான காப்பு மெருகுப்பூச்சு. ஒரு கம்பியை ஹைட்ரஜன்-ஆக்சிஜன் சுடர் வழியாகச் செலுத்தும்போது, அது அணுக்களாகக் குறைந்து கம்பிப் பரப்பில் மேற்பூச்சாகத் தெளிக்கப்பட்டு படிகிறது

metamorphic rock: (கனிம.) உருமாற்றப் பாறை: தனது மூலப் பண்பியல்பிலிருந்து எரிமலைக் குழம்புப் பாறையாக அல்லது படிவியற் படுகைப் பாறையாக மாற்றம் பெற்றுள்ள பாறை

metatarsal bones: (உட.) கால் விரல் எலும்பு: கணுக் காலுக்கும், கால் விரல்களுக்கும் இடைப்பட்ட ஐந்து நீண்ட விரல்க்ளின் எலும்புத் தொகுதி

meteor bumper: (விண்.) எரி மீன் காப்பு: விண்ணிலிருந்து விழும் எரிமீன்களின் துகள்களினால் விண்வெளி ஊர்திக்கு ஊறு ஏற்படாமல் காக்கும் ஒரு மெல்லிய கேடயம்

meteorograph : (வானூ.)வானிலைப் பதிவுமானி : பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயுள்ள வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப் பதிவித்துக் காட்டும்