பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

angle of compensation: சரியீட்டுக் கோணம்: ஒரு திசைகாட்டியில் உட்காந்த விளைவுகளைச் சரி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு திருத்த கோணம்

angle of deadrise : (வானூ.) நிலை எழுச்சிக்கோணம்: உடற் பகுதியின் அடித்தளத்தினை முதுகுத் தண்டுடன் இணைக்கும் ஒரு குறுக்கு வெட்டுக் கோட்டினால் கிடைமட்டத்துடன் உண்டாகும் கோணம்

angle of declination : (மின்.) பிறழ்ச்சிக் கோணம் : மாறுபாட்டுக் கோணம். ஒர் இடத்தின் பூகோள நெடுக்கு வரைக்கும் காந்தவியல் நெடுக்கு வரைக்குமிடையிலான கோணம்

angle of dip : (மின்.) இறக்க கோணம்: செங்குத்தான மட்டத்தளத்தில் திரும்புகிறபோது ஒரு காந்த ஊசி காந்தவியல் நெடு வரைக்கு நேரிண்மையாக வருகிற போது தொடுவானத்துடன் அந்தக் காந்தஊசி ஏற்படுத்துகிற கோணம்

angle of heel : (வானூ.) சாய் நிலைக்கோணம் : ஒரு கிடைமட்டத்தளத்திற்கும் நீரில் கடல் மட்டத் தளத்தின் பக்க அச்சுக்குமிடையிலான கோணம்

angle of incidence : (வானூ.) படுகோணம்: வீழ்தடத்தில் பரப்பின் செங்கோட்டுடன் தொடு கோடு கொள்ளும் கோணத் தொலைவு

angle of inclination : (எந்.) சாய்வு கோணம் : ஒரு திருகுபுரி அதன் அச்சுடன் கொள்ளும் கோணத் தொலைவு

angle iron: (எந்.) கோண இரும்பு: ஒரு கட்டுமான இரும்புப் பட்டை. இதன் ஒரு பகுதி ஒரு செங்கோண வடிவில் அமைந்திருக்கும்

angle of lag (மின்.) பின்னடைவுக் கோணம் : மாற்று மின்னோட்டச் சுற்றில் செயல்திற அமைப்பானின் இயக்கப் படிநிலை. மொத்த மின்னோட்டத்தைவிட எந்த அளவுக்குக் குறைகிறது என்பதைக் காட்டும் கோணம்

angle of lead : (மின்.) முந்து கோணம்: திசைமாற்றித் தொடுவிகள், தீப்பொறியைத் தவிர்ப்பதற்காக இயல்பான தளத்திலிருந்து எந்தக் கோணத்தில் திருப்பப்படு கின்றனவோ அந்தக் கோணம்

angle of mandible : (உட.)கீழ்த்தாடைக் கோணம்

angle of pitch : (வானூ.) சாய் வீழ்வுக் கோணம் : இரு சமதளங்களுக்கிடையிலான கூர்ங்கோணம். ஒரு தளம் விமானத்தின் பக்க அச்சினையும் காற்றின் திசையினையும் உள்ளடக்கியிருக்கும்; இன்னொரு தளம், பக்க அச்சினையும், நீள் கோட்டு அச்சினையும் உள்ளடக்கியிருக்கும். விமானம் இயல்பாகப் பறக்கும்போது, சாய் வீழ்வுக் கோணம் என்பது, நீள்கோட்டு அச்சுக்கும் காற்றின் திசைக்குமிடையிலான கோணம் ஆகும்

angle of reflection : (மின்.) பட்டெறி கோணம்; பிரதிபலிப்புக் கோணம்; உருத்தெரி கோணம் : முட்டி மீண்ட கதிர்ப்பரப்பின்செங்குத்துக் கோட்டுடன் இயங்கும் கோணம். பட்டெறி கோணமும் படுகோணமும் சமமானவையாகும்

angle of refraction : ஒளிவிலகு கோணம் : ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான கோட்டிற்குமிடையிலான