பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

429

ன்சில் பயன்படுத்தப்பட்டது. இன்று உலகெங்கும் அறிவியல்பணிகள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது

metric threads : மெட்ரிக் திரு கிழைகள் : மெட்ரிக் அளவுகளுக்கிணங்க விகிதமுறையில் அமைந்த திருகிழைகள்

mezzanine : (க.க.) இடைமாடி : இரண்டு உயர்மாடிக் கட்டிடங்களில் நிலத்தளத் தளத்திற்கும் முதல் மாடிக்கும் இடைப்பட்ட இடைத்தள மாடி

mezzotint : (அச்சு.) முரட்டு அச்சுப் பாளம் : கரடு முரடாக்கப்பட்ட தகட்டின் பின்னணியையே செறி நிழல் வண்ணமாகக் கொண்டு பிற பகுதிகளில் கரடு முரடு நீக்கப் பட்ட ஒளிப்பட அச்சுப்பாளம். இதனை 1643இல் லுட் விக் கண்டுபிடித்தார்

mica : (கனிம.) அப்பிரகாம் (காக்காய்ப் பொன்) : முழுமையாகப் பிளந்திடும் தன்மையுடைய ஒரு வகை சிலிக்கேட் என்னும் மணற் சத்து உப்பு. இது செதில் செதில்களாகப் பிளவுபடும்

micas : அப்பிரகக் காகிதம் : அலங்காரப் பெட்டிகள் செய்வதற்கான காகிதம். இதில் அனிலைன் சாயப் பொருளுடன் கலந்து அப்பிரகம் பூச்சுக் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செதுக்கு வேலைப்பாடாகவும் புடைப்பாகவும் அச்சிடப்படும்

microampere : (மின்.) மைக்ரோ ஆம்பியர் : ஒரு ஆம்பியரில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. 0.000001 ஆம்பியர்

microfarad : (மின்.) மைக்ரோ ஃபாராட் : ஒரு கொள்ளவு அலகு. மின்காந்தப் பரும அளவான ஒரு ஃபாராட்டின் பத்து லட்சத்தில் ஒரு பகுதி

micrometer : நுண்ணளவைமானி : நுண்பொருட்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அளந்து காட்டுங் கருவி

micrometer caliper : நுண் இடுக்கியளவி : மிக நுண்ணிய தொலைவுகளை அளப்பதற்குரிய, அளவு வரையிட்ட திருகுடன் கூடிய ஒர் இடுக்கியளவி

micron : (மின்.) மைக்ரோன் : பதின்மான நீட்டலளவை அலகில் பத்துலட்சத்தில் ஒரு பகுதி

microphone : (மின்.) ஒலி பெருக்கி : நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலிபெருக்கிகளைச் செயற்படுத்தும் கருவி

micro photograph : நுண்ணொளிப்படம் : ஒரு பெரிய பொருளை ஒரு சிறிய ஒளிப்படமாகக் குறைத்து உருவாக்கும் ஒளிப் படம்

microscope : நுண்ணோக்காடி (பூதக் கண்ணாடி) : மிக நுண்ணிய பொருட்களின் உருவத்தைப் பெருக்கிக் காட்டக்கூடிய, ஒன்று அதற்கு மேற்பட்ட ஆடிகளைக் கொண்ட ஒரு கருவி

microtome : நுண்ணோக்காடி வெட்டு கருவி : நுண்ணோக்காடிகளுக்கான சிறிய துண்டுகளைச் செதுக்கும் கருவி

microvolt : (மின்.) மைக்ரோ வோல்ட் : மின்இயக்க ஆற்றல் அலகின் பத்துலட்சத்தில் ஒரு பகுதி