பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

microwave : நுண்ணலை : ஒரு மீட்டருக்குக் குறைவான நீளமுள்ள வானொலி அலைகள். இது நெடுந்தொலைவிலுள்ள கருவிகளை நிலையத்துடனும், நிலையங்களை மற்ற நிலையங்களுடனும் இணைப்பதற்குப் பயன்படுகிறது

microtron : (uósir swfl.) soupá ரோட்ரான் : அதிவேக எலெக்ட்ரான்களை உண்டாக்கும் சிறிய எந்திரம். இதில், எலெக்ட்ரான்கள், ஒரு காந்தத்தின் மூலம் வட்டப் பாதைகளில் சுற்றும்படி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்திலும், ஒர் உயர் அலைவெண் வானொலி அலைப்பான் மூலம் உண்டாக்கப்படும் ஒரு மின்னியல் புலத்திலிருந்து அவை முன்னே உந்தப்படுகின்றன

microwave reflectors : நுண்ணலை பிரதிபலிப்பான் : நுண்ணலைக் கற்றைகளை நெறிப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரே மாதிரியல்லாத பிரதிபலிப்பான்கள்

middle space : (அச்சு.) நடு இடை வெளி : அச்சுக்கோப்பில் எழுத்துக்களிடையிலான இடைவெளி

middle - tones : (அச்சு.) நடு வண்ணச் சாயல் : ஒளிப்படத்தில் அல்லது நுண்பதிவுப் படத்தில் இளம் வண்ணத்திற்கும் அடர் வண்ணத்திற்குமிடையிலான வண்ணச் சாயல்கள்

midwing monoplane: (வானுT.) நடு இறகு ஒற்றைத்தட்டு விமானம்: விமானத்தின் மையத் கோட்டில் இறகு பொருத்தப்பட்டுள்ள ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம்

mil : மில் : கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அலகு. இது அங்குலத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதி, 0.001

mild steel : மென்னெஃகு : கரியம் குறைவாகவுள்ள எஃகு, இது பற்ற வைக்கக் கூடியது. ஆனால் இது பதமாவதில்லை

mildew : பூஞ்சணம்: ஈரம்படு பொருட்களின் மீது படியும் ஒரு வகை பூஞ்சக்காளான்

mil foot : மில் அடி: கம்பியிலுள்ள மின் தடையின் ஒரு தர அலகு. ஒர் அடிக்கம்பியில் மின் தடையின் அளவு = விட்டத்தில் ஒரு மில்

milk sugar : (வேதி.) பால் சர்க்கரை : பார்க்க பால் வெல்லம்

mill : ஆலை : (1) உற்பத்திச் செய் முறைகள் நடைபெறுவதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள கட்டிடம் அல்லது கட்டிடங்களின் தொகுதி. பல்வேறு ខ្ស குறிப்பிட இச் சொல் பயன்படுகிறது. (2) செய்முறை வேலைகளுக்கான திரிகைப் பொறியமைவு

milliampere : (மின்.) மிலி ஆம்பியர் : ஒரு ஹென்ரியில் ஆயிரத்தில் ஒரு பகுதி. கொள்ளளவின் ஒர் அலகு

millihenry: (மின்.) மிலிஹென்ரி: ஒரு கொள்ளளவு அலகாகிய ஹென்ரியின் ஆயிரத்தில் ஒருபகுதி

millimeter: (பொறி.) மில்லி மீட்டர்: பருமனலளவு அலகு. ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி .03937"

milling : (பட்.) சால்வரிவிடல்: உலோகத் தகடுகளில் பள்ளங்களை வெட்டும் செய்முறை

milling cutters: (எந்.) துளை வெட்டுங் கருவி: உலோகத் தகட்டில் துளைகள் இடுவதற்கான எந்திரத்தில் பயன்படும் பல்வேறு சுழல் வெட்டுக் கருவிகள்