பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

minor carrier : (மின்.) சிறு மின் கடத்தி: பெரிய மின்கடத்திகளுக்கு மாறாக மின் கடத்தாத் திண்மப் பொருட்கள் வழியாக மின் கடத்துதல். எடுத்துக்காட்டாக, எலெக்ட்ரான்கள் பெரிய மின் கடத்திகள் என்றால் துளைகள் சிறு மின் கடத்திகளாகும்

minor diameter : சிறுபடி விட்டம் : ஒரு திருகில் அல்லது மரையாணியில் இழையின் மிகக் குறைந்த அளவு விட்டம்

minus charge: (மின்.) மறிநிலை மின்னேற்றம் : கழித்தற்குறியின் மூலம் சுட்டப்படும் எதிர்மின்னேற்றம் பிசின் பொருட்களில் உரசும் போது இத்தகைய மின்னேற்றம் உண்டாகிறது

minute : (க.க.) நுண்பாகை : கோண அளவில் ஒரு பாகையின் அறுபதில் ஒரு கூறு

minuteman: (விண்.) வான்படை ஏவுகணை : கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் வான்படை ஏவுகணை. இது 5,500 கடல் மைல் தொலைவு செல்லக்கூடியது. இது, மூன்று கட்டங்களுடைய செலுத்து ராக்கெட் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது

misalignment of wheels : (தானி.) பொருங்தாச் சக்கர இணைப்பு : சீருந்தின் சக்கரங்கள் முயாக இணைக்கப்படவில்லையெனில், சக்கரங்களைத் திருப்புவது கடினம். இதனால் சீருந்து முழுவதிலும் அளவுக்கு மீறி அழுத்தம் ஏற்பட்டு டயர்கள் விரைவாகத் தேய்ந்துவிடும் சீருந்தின் முன் சக்கரங்கள் சீராக இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் குறைந்தது ஆண்டிற்கு ஓரிரு முறை சரி பார்த்தல் வேண்டும்

misprint : (அச்சு) அச்சுப் பிழை: பிழையாக அச்சிடுதல்; அச்சிடுவதில் ஏற்படும் பிழை

missilery : (விண்.) ஏவுகணையியல் : ஏவுகணைகளை வடிவமைத்தல், உருவாக்குதல், செலுத்துதல், வழிச்செலுத்துதல் ஆகியவை பற்றிய அறிவியல்

mission type: பெரு வடிவ அறைகலன்: கருவாலி மரத்தில் கருமை வண்ணத்தில் வளைவுகளின்றி நேர்கோடுகளில் தயாரிக்கப்படும் மிகப் பெருமளவில் வடிவங் கொண்ட அறைகலன்

miter: செங்கோண இணைப்பு: மரத்துண்டுகளைச் செங்கோணத்தில் இணைத்தல்

துண்டுகளின் இணை வாயின் சாய்வு 45° கோணம்படும்படியாக இணைத்தல்

miter box : கோண அறுவைக் கருவி : மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்கு துணை செய்யும் அமைவு

miter cut: (மர.வே.) கோண அறுவை: துண்டுகளின் இணைவாயின் சாய்வு 45° கோணமாக அமையுமாறு அறுத்தல். இரு துண்டுகளும் இணையும் போது ஒரு செங்கோணம் உண்டாகும்

miter joint: (க.க.) செங்கோண இணைப்பு : மரத்துண்டுகளின்